Madhumitha: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலக என்ன காரணம்; ரசிகரின் கேள்விக்கு மதுமிதா கொடுத்த ஷாக்கிங் பதில்!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலிலிருந்து விலக என்ன காரணம்? என ரசிகர் கேட்டதற்கு அதிர்ச்சி பதில் கொடுத்துள்ளார்.
எதிர்நீச்சல்:
கடந்த 2022 ஆம் ஆண்டும் முதல், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறப்பான தொலைக்காட்சி தொடர் எதிர்நீச்சல். இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மாரிமுத்து, சத்தியபிரியா, திருச்செல்வம் ஆகியோர் பலர் நடிப்பில் இந்த தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது. தனது தந்தையின் லட்சத்திற்காக கணவர் வீட்டில் எதிர்கொள்ளும் பெண்ணை பற்றியும், அவர் அந்த வீட்டில் வேலைக்காரர்கள் போல் இருக்கும் மற்ற மருமகள்களை எப்படி வெளியே கொண்டு வருகிறார்? என்கிற பரபரப்பான கதைக்களத்துடன் இந்த தொடர் எடுக்கப்பட்டது.
மாரிமுத்து மரணம்:
எதிர்நீச்சல் தொடரின் முதல் சீசன் 744 எபிசோடுகள் வரை ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த தொடர் மூலமாக பிரபலமான மாரிமுத்து மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவருக்குப் பதிலாக நடிகர் வேல ராமமுர்த்தி, ஆதி முத்து குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால், அவரது ரோல் சரியாக பேசப்படவில்லை என்கிற விமர்சனம் முதலில் எழுந்தாலும், பின்னர் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.
கடந்த ஜூன் 2024 ஆம் ஆண்டு இந்த தொடரின் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில், இப்போது 2ஆம் பாகமும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி முதல் 'எதிர்நீச்சல் தொடர்கிறது' என்ற டைட்டிலில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்நீச்சல் முதல் சீசனில் நடித்து வந்த மதுமிதா, 2ஆவது சீசனில் நடிக்கவில்லை. அவருக்கு பதிலாக நடிகை பார்வதி நடித்து வருகிறார்.
மதுமிதா கூறிய அதிர்ச்சி ரிப்பிலே:
இந்த நிலையில் தான் எதிர்நீச்சல் தொடரில் இருந்து விலகியது ஏன் என்கிற உண்மையை மதுமிதா கூறியுள்ளார். ரசிகர்களுடன் சமூக வலைதள பக்கத்தில், உரையாடிய மதுமிதாவிடம் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலக என்ன காரணம் என்று கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த மதுமிதா மற்றொரு இன்ஸ்டா லைவ்வில் பதில் அளிக்கிறேன் என்று கூறியுள்ளார். மதுமிதா, இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.