கணவரின் டார்ச்சர் தாங்கமுடியல : ரசிகையின் லைவ் சேட் மெசேஜைப் பார்த்து கொந்தளித்த விஜே ரம்யா..!
பிரபல தொகுப்பாளர் மற்றும் நடிகை ரம்யாவின் இன்ஸ்டாகிராம் லைவில் அதிர்ச்சியான பதிவு ஒன்று வந்துள்ளது.
சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் தனக்கென ஒரு இடத்தினை பிடித்த விஜேகளில் ரம்யாவும் ஒருவர். டெலிவிஷனில் மிகவும் பரபரப்பாக இருந்து வந்த அவர் சினிமாவிலும் கால்பதிக்க தொடங்கினார். சமீபத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில், சமுத்திரகனி, கருணாஸ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த சங்கத்தலைவன் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து அசத்தி இருந்தார் ரம்யா. இப்பட வெற்றிக்கு பிறகு, தனது ரசிகர்களுடன் நட்பினை தொடர வேண்டும் என்பதற்காக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருகிறார் விஜே ரம்யா.
இந்நிலையில் தான் இன்ஸ்டாகிராமில் என்ன லைவ் சேட் (live chat) செய்யலாம்? யோசித்த அவர், அதன்பிறகு இன்றைய நாள் எப்படி போனது? என ரசிகர்களிடம் தன்னுடைய லைவ் சேட்டினை தொடங்கினார் ரம்யா. தற்போது கொரோனா கால ஊரடங்கு சமயம்என்பதால், தங்கள் வீட்டில் என்னென்ன சுவாரசிய விஷயங்கள் நடந்தது? என்ன லூட்டிகளை குழந்தைகள் செய்தார்கள்? என ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு விஷயங்களை ஷேட் செய்து வந்தனர்.
இப்படி மிகவும் ஜாலியாக சென்று கொண்டிருந்த லைவ் சேட்டில் தான், ரம்யாவின் ரசிகை ஒருவர், எனது கணவர் தினமும் என்னை அடிக்கிறாரு. அதனால், என்னோட கல்யாண வாழ்க்கையை முடிச்சிக்கிறேன். எல்லா பெண்களும், உங்களுக்காக நீங்கள் தான் போராட வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தான் தன்னுடைய லைவ் சேட்டில் மிகவும் ஜாலியாக பேசி வந்த ரம்யா மிகவும் ஆவேசமாகினார்.
நிச்சயமாக லைவ்ல இந்த மாதிரி ஒரு மெசேஜ சத்தியமா நான் எதிர்பார்க்கல’ எனவும்,‘நீங்க பாதுகாப்பான இடத்துல, உங்க குடும்ப நபர்களுடன் இருப்பீங்கனு நம்புறேன். என உருக்கமான பதிவினை வெளியிட்டிருந்தார். இதோடு மட்டுமின்றி இந்த மாதிரியாக, பெண்களுக்கு எதிராக மன மற்றும் உடல்ரீதியான தாக்குதல்கள் தற்போது நடந்து வருகிறது எனவும் உங்களுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலோ, உடல்ரீதியாக மற்றும் மனரீதியாக பெண்களுக்கு தாக்குதல்கள் மற்றும் சீண்டல்கள் இருந்தாலோ, தனியாக ஃபீல் பண்ணாமல் உங்களுக்கு நம்பிக்கையானவர்களை அணுகி அவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள், தயவுசெய்து உங்களுக்குள்ளேயே வெச்சுக்காதீங்க என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த லைவ் சேட் மைசேஜிற்கு சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களை பலர் பதிவிட்டு வருகின்றனர்