VJ Archana:"ஊர் வாயை நம்மால் அடைக்க முடியாது".. எச்சரித்த சின்மயிக்கு பதிலடி கொடுத்த VJ அர்ச்சனா !
பாடலாசிரியர் வைரமுத்துவுடன் எடுத்த புகைப்படத்தில் பாடகி சின்மயி செய்த கமெண்ட்டுக்கு நேர்காணல் ஒன்றில் நடிகை விஜே அர்ச்சனா பதிலடி கொடுத்திருத்துள்ளார்.
வைரமுத்துவுடன் செல்ஃபி
விஜய் தொலைக்காட்சியின் ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடித்து, சமீபத்தில் அதிலிருந்து விலகியவர் அர்ச்சனா. இவர், சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி வருகிறார். இவர், சமீபத்தில வைரமுத்துவை சந்தித்ததாக கூறி, அவருடன் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் இடம் பெற்றிருந்த புகைப்படங்களில், வைரமுத்து அர்ச்சனாவை ஆசிர்வதிப்பது போன்ற போட்டோக்கள் இடம் பெற்றிருந்தன. இதற்கு பலரும் கருத்து தெரிவித்த நிலையில், சின்மயியும் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
விஜே அர்ச்சனாவின் பதிவிற்கு, “இது போலத்தான் அனைத்தும் ஆரம்பிக்கும். தயவு செய்து கவனமாக இருங்கள். அவரை சந்திக்கையில் யாரையேனும் துணைக்கு வைத்திருங்கள், அவரிடமிருந்து சற்று தள்ளியே இருங்கள்” என கமெண்ட் செய்தார் சின்மயி. புகைப்படம் வெளியிட்டிருந்த அர்ச்சனா, தனது பதிவில் இடம் பெற்றிருந்த சின்மயியின் கமெண்டை நீக்கினார்.
இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் அர்ச்சனாவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர்” என் அப்பா ஒரு தமிழ் பேராசிரியர். எனவே எங்கள் குடும்பத்தில் தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். வைரமுத்துவின் திரைப்படப் பாடல்களை அனைவரும் கேட்டிருப்பார்கள், நான் அவருடைய பெரிய ரசிகை. ஒரு நாள் நான் படப்பிடிப்பில் இருந்த பொழுது அவரை சந்தித்தேன். அப்போது அவரிடம் எப்படி இருக்கீங்க சார், நான் உங்கள் ரசிகை என்று பேசினேன். அது ஒரு சாதாரணமான உரையாடலாக தான் இருந்தது. படைப்பாற்றல் மிக்கவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. மற்றபடி சின்மயியை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியாது.
ஏதாவது இப்படி நடக்கும்போது எல்லோரும் பேச தான் செய்வார்கள். ஊர் வாயை நம்மால் அடைக்க முடியாது. இட் வாஸ் ஜஸ்ட் அ ஃபேன் கேர்ள் மொமண்ட், இதை புரியாதவர்கள் அப்படியே இருக்கட்டும்” என்று கூறியிருக்கிறார்.