மேலும் அறிய

ஒற்றை தலைவலியால் விஷால் படும் வேதனை; கட்டிங் போடாமல் தூங்க முடியாது - ஆர்யா பகிர்ந்த தகவல்!

தினமும் கட்டிங் போடாமல் விஷாலால் தூங்க முடியாது என்று, விஷால் பற்றி ஆர்யா பகிர்ந்த பழைய தகவல் தற்போது மீண்டும் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

இயக்குநர் பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பது என்பது கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்ததற்கு சமம். உடலை வருத்திக் கொண்டு கஷ்டப்பட்டு நடிக்க வேண்டும். உதாரணமாக சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார், வணங்கான் என்று எல்லா படங்களையும் பார்த்தால் ஹீரோ மற்றும் ஹீரோயினை எந்தளவிற்கு படாதபாடு படுத்தி நடிக்க வைத்திருப்பர் பாலா என்பது தெரியவரும்.

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு ஹீரோவையும் சும்மாவே விட்டிருக்கமாட்டார். கதாபாத்திரமும், காஸ்டியூமும் அந்தளவிற்கு வித்தியாசமானதாக இருக்கும். சேது, அவன் இவன், பரதேசி என்று எல்லா படத்திலும் காஸ்டியூம் எல்லாமே ரொம்பவே சிம்பிள் தான். பாலாவின் கதையில் சிக்கிய ஹீரோக்களின் பட்டியலில் விக்ரம், சூர்யா, அதர்வா, ஆர்யா ஆகியோர் இருந்த நிலையில் விஷாலும் 'அவன் இவன்' படத்தில் சிக்கிக் கொண்டார். அந்தப் படத்தில் பெண் கதாபாத்திரத்திலும் விஷால் நடித்திருந்தார். அந்த உடையில் டான்ஸூம் ஆடி அசத்தியிருப்பார். அந்தளவிற்கு விஷால் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.

ஒற்றை தலைவலியால் விஷால் படும் வேதனை; கட்டிங் போடாமல் தூங்க முடியாது - ஆர்யா பகிர்ந்த தகவல்!

அப்படிப்பட்ட விஷாலின் நிலைமை தலைப்புச் செய்திகளில் அடிபட்டு வருகிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட விஷாலின் மதகஜராஜா வரும் 12 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் விஷால், சுந்தர் சி, குஷ்பு, விஜய் ஆண்டனி ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது விஷால் பார்ப்பதற்கு உடல் எடை குறைந்த நிலையிலும், கை நடுங்கியபடியும் காட்சியளித்தார். இது குறித்து அவருக்கு கடுமையான காய்ச்சல் இருப்பதாக, குளிரில் அவரது கை நடுங்கியது என்றும் படக்குழு விளக்கம் அளித்தது.

இப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இதற்க்கு விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் இது முற்றிலும் வதந்தி. விஷால் நலமுடன் இருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களில் குணமடைந்து விடுவார் என தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தார்.  இந்த நிலையில் தான் விஷாலால் குடிக்காமல் தூங்க முடியாது என்று ஆர்யா பேசிய பழைய வீடியோ ஒன்று இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஒற்றை தலைவலியால் விஷால் படும் வேதனை; கட்டிங் போடாமல் தூங்க முடியாது - ஆர்யா பகிர்ந்த தகவல்!

இயக்குநர் பாலா இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் நடித்து 2011 ஆம் ஆண்டு வெளியான படம் தான் 'அவன் இவன்'. இருவரும் சக நடிகர்கள் என்பதை தாண்டி மிகவும் நெருக்கமான நண்பர்கள். எனவே தான் இருவரும் இந்த படத்தில் ஒன்றாக நடித்தனர். ஆர்யா, பேட்டி ஒன்றில் பேசிய போது, ஷூட்டிங் ஸ்பாட்டில் நாள்தோறும் விஷால் கதறி அழுவான். அதோடு தலையும் வலிக்கிறது என்று கூறுவான். 'அவன் இவன்' படத்திற்காக ஒன்றரை கண்ணை வைத்துக் கொண்டு விஷால் நடிக்கும் போதே இயக்குநர் பாலா அவனை உண்டு இல்லனு வாங்கியிருவாரு.

அதற்கு எனக்கு ஒன்றரை கண்ணு என்று நினைச்சிட்டாரோ என்று என்னிடம் கேட்பான். அந்தளவிற்கு கஷ்டம். அப்போது தலை வலிக்கும் போது ஒரு ஆஃப் சாப்பிடு சரியாக போய்விடும் என்று நான் சொன்னேன். இப்போதெல்லாம் அவனால் கட்டிங் போடாமல் தூங்கவே முடியாவில்லை என்று அவர் பேசியிருக்கிறார். இது தான் இப்போது விஷாலின் இந்த நிலைக்கு காரணம் என்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget