(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video |என்னா ஒரு நேக்கு.. செம்ம ட்ரிக்கைப் பயன்படுத்தி மரமேறும் பாம்பு; வீடியோ வைரல்!
எடை அதிகமுள்ள பாம்பு ஒன்று மரத்தில் ஏறுவதற்கு வித்தியாசமான முறையை கடைபிடிக்கும் விடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது!
நமக்கு அருகில் இருப்பவர்கள் வேடிக்கையான சில செய்கைகளை செய்தாலே நாம் மிகவும் குஷி ஆகி விடுவோம். அதை பார்த்து பார்த்து பல முறை ஆச்சர்யப்பட்டு வாய் பிளக்க செய்வோம். அதே போன்று சுட்டி குழந்தைகள் செய்யும் சேட்டைகளை பார்த்தாலும் நம்மை அறியாமலே நாம் வாய்விட்டு சிரிப்போம், வியப்போம். மனிதர்கள் செய்யும் சேட்டைகளுக்கே இப்படி சந்தோஷமாக இருக்கிறோம் என்றால் விலங்குகள் செய்யும் வேடிக்கையான விஷயங்கள் நம்மை மேலும் மகிழ்ச்சியாக்கும். அப்படியான விடியோ ஒன்றில் மலைப்பாம்பு ஒன்று செய்யும் காரியம் பலரை ரசிக்க வைத்து வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
Watch video: நானும் சிங்கம்தான் பாஸு.. நம்ப மாட்டீங்களா..? வைரலாகும் லோ பட்ஜெட் சிங்கம்..
Watch Video: தன் காதுகளின் நிறத்தை மாற்றும் புழு... வைரல் வீடியோ!
மலைப்பாம்பு ஒன்று மரத்தில் ஏறும் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. நீண்ட பாம்பு ஒன்று அதன் அதிக எடையுடன் மரத்தின் மீது ஏறுவதற்கு ஒரு பிரத்யேக ட்ரிக்ஸை பயன்படுத்தி எறிவிடுவதை விடியோ பதிவு செய்துள்ளது. சுமார் ஐந்து ஆண்டுகள் முன்பு தென்கிழக்கு ஆசியாவில் எங்கிருந்தோ எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. வீடியோவில் காணப்படும் பாம்பு ஒரு ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு, இது உலகின் மிகவும் ஆபத்தான பாம்புகளில் ஒன்றாகும்.
Watch Video | செல்ஃபோனுக்காக க்யூட் சண்டை : குழந்தையும், க்யூட் குரங்கும் செய்த சேட்டை..
View this post on Instagram
Watch Video | உலகத்துலேயே இதுதான் சின்ன குரங்காம்.. IFS அதிகாரி பகிர்ந்த க்யூட் வீடியோ..
1.5 முதல் 6.5 மீ (4.9 முதல் 21.3 அடி) மற்றும் 75 கிலோ எடை வரை வளரக்கூடிய உலகின் மிக நீளமான ஊர்வன வகையை சேர்ந்ததாகும். அந்த வகையான நீளம் மற்றும் எடையுடன் கூடிய பாம்புகள், மரங்கள் அல்லது மேற்பரப்புகளில் ஏறுவதற்கு சிரமப்படும். ஆனால் இந்த பாம்பு அதனை எளிதாக செய்து முடிக்கிறது. வீடியோவில், பெரிய மலைப்பாம்பு ஒரு உயரமான பனை மரத்தின் மீது ஏறுவது பார்ப்பதற்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உள்ளது. பாம்பு அடர்ந்த மரத்தின் பட்டையை சுற்றிக் கொண்டு, அதைச் சுற்றிச்சுழன்று, அதன் பிறகு தலையை உயர்த்துவதை வீடியோவில் காண முடிகிறது. பின்னர் அதே முறையை பின்பற்றி தொடர்ந்து மரத்தின் மேல் ஏறுவது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.