(Source: ECI/ABP News/ABP Majha)
Watch video: நானும் சிங்கம்தான் பாஸு.. நம்ப மாட்டீங்களா..? வைரலாகும் லோ பட்ஜெட் சிங்கம்..
கூட்டத்தினுள் ஒரு நாய் சிங்கம் போல வேடம் இட்டுக்கொண்டு உள்ளே நுழைந்த விடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.
நாள்தோறும் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது வழக்கம். குறிப்பாக கொரோனா காலத்தில் அனைவரும் வீட்டிலேயே இருந்ததால் இது போன்ற வீடியோக்கள் வைரலாவது அதிகரித்தது. குழந்தைகளின் குறும்புத்தனமான செயல்கள், நாய், பூனைகளின் கியூட்டான வீடியோக்கள், பறவைகளின் வித்தியாச செயல்கள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாவது வழக்கமாக உள்ளது. நெட்டிசன்கள் பலரும் இதுபோன்ற வீடியோக்களை தொடர்ந்து ஷேர் செய்து வருகின்றனர். சமீபத்திய வைரல் வீடியோவில் ஒரு நாய் சிங்கத்தின் உருவத்தில் அசாதாரணமாக நடந்து செல்வதை காண முடிகிறது. சிங்கம் போன்ற மேனியானது அங்கிருந்தவர்களுக்கு உண்மையான பயத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு நல்ல வேஷமிட்டு வந்தது.
12 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ கிளிப்பில், மனிதர்கள் நிறைந்த ஒரு மைதானத்தின் நடுவில் எங்கிருந்தோ ஒரு சிங்கம் திடீரென நுழைகிறது. ஆனால் அது உண்மையில் சிங்கம் அல்ல, ஒரு நாய்க்கு சிங்கம் போல வேடம் போடப்பட்டுள்ளது. சிங்கத்தின் மேனி போலவே ஒரு பெரிய பழுப்பு நிற கேன்ஸ் அணிவிக்கப்பட்டுள்ளதால், சிங்கத்தின் முன்புற தோற்றத்தை போல அப்படியே ஒத்து காணப்படுகிறது.
View this post on Instagram
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் @dailygameofficial என்ற பேஜில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. “லயன் இன் பப்ளிக்!” என்ற தலைப்பில் இந்த வீடியோவானது ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் கிளிப்பின் முடிவில், நாய் அதன் உரிமையாளர்களை நோக்கி நடந்து செல்கிறது, அவர்கள் அந்த நாயிடம் ஒரு தட்டைக் கொடுக்கிறார்கள். இந்த வீடியோவில் சிங்கம் போல மாறுவேடம் போடப்பட்டுள்ள நாய் கூட்டத்திற்குள் திடீரென நுழையும் போது அங்கிருந்தவர்கள் யாரும் அதனை பார்த்து பயம் கொள்ளவில்லை. மாறாக அனைவரும் அவர்களது வேலைகளை செய்துகொண்டு இயல்பாக இருந்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் வீடியோவில் இருப்பது நாய் தான் என்ற தகவல் தெரிந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வீடியோவிற்கு கமெண்ட் செய்துள்ள நெட்டிசன்கள், 'டாக்' மற்றும் 'லயன்' ஆகிய வார்த்தைகளை இணைத்து அந்த நாய்க்கு 'டாக்லி' என்று பெயர் வைத்துள்ளனர். ஒருவர், "லோ பட்ஜெட் சிங்கம்" என்று கேலி செய்துள்ளார், மற்றொருவர், "இது iOS ரிங்டோனை கொண்ட ஆண்ட்ராய்டு போன் போல் தெரிகிறது" என்று வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார். "இந்த சிங்கம் உருவத்தில் இருக்கும் நாய் நிறைய பேரை பயமுறுதியிருக்கிறது. "கிட்டத்தட்ட இது ஒரு ஒல்லியான சிங்கம் என்று நினைத்தேன்" என்றும் சுவாரஸ்யமான கருத்துகள் வந்தவண்ணம் உள்ளது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர். இந்த வீடியோ கிட்டத்தட்ட 40 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.