Viral Video: 8 மாசமாகிடுச்சு.. கிரிக்கெட் ஸ்டேடியத்தில் சமந்தா பாட்டு! தெறிக்கவிட்ட ரசிகர்கள்.. வைரல் வீடியோ!
சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கூட படம் வசூல் ரீதியாக மெகா ஹிட்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் கடந்த ஆண்டு டிச.17ம் தேதி உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், கிஷோர், சுனில், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்தனர். ‘ரங்கஸ்தலம்’ வெற்றிக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம், ஹிட் பாடல்கள், சர்ச்சைகள், கடைசி நேர இழுபறி எனப் பெரும் எதிர்பார்ப்புக்கிடைய இப்படம் வெளியானது.
சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கூட படம் வசூல் ரீதியாக மெகா ஹிட். இப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் சமந்தாதான். ஓ சொல்றியா பாடலுக்கு சமந்தா ஆடிய டான்ஸ்தான் படத்தை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு சென்றது. அந்தப்பாடலுக்காகவே புஷ்பா படத்துக்குச்சென்றவர் பலர். இந்த ஒரே பாடலுக்காக சமந்தாவுக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. சமந்தா டான்ஸ் ஆடி கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னமும் அந்த பாடலுக்கான க்ரேஸ் குறையவில்லை.
ப்ளோரிடாவில் உள்ள ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஓ ஆண்டவா பாடல் ஒலிக்க அங்கிருந்த ரசிகர்கள் அந்த பாடலுக்கு டான்ஸ் ஆடுகின்றனர்.
Oo Antava song at Central Broward Park & Broward County Stadium
— Allu Naseer (@allunaseer_) August 9, 2022
Lauderhill, Florida#AlluArjun𓃵 #AlluArjunArmy #AlluArjunArmyApp #AlluBhai One Man Army 🦁#AlluArjun #AlluSnehaReddy #Pushpa #PushpaRaj #PushpaTheRise #PushpaTheRule #ThaggedheLe🤙#AlluNaseer_ @alluarjun pic.twitter.com/n8qqblOwVu
முன்னதாக, இந்த ஒரே பாடலுக்காக சமந்தாவுக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.இது குறித்து சுபாஷ் கே. ஜா ஒரு பேட்டியில், “வெறும் 3 நிமிட பாடலுக்கு சமந்தாவுக்கு கிட்டத்தட்ட ரூ.5 கோடி சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவர் அந்தப் பாடலுக்கு நடனமாட ஒப்புக்கொள்ளவே இல்லை. அப்புறம் அல்லு அர்ஜூன் தான் அவரை சமரசப்படுத்தினார். ஆரம்பத்தில் அந்த நடன அசைவு முடியாது , இது வேண்டாமே என்றெல்லாம் அவர் நிறைய கெடுபிடிகளை விதித்தார். இருந்தாலும் பின்னர் அவர் ஒப்புக் கொண்டார். ஆனால், நடனப் பயிற்சியை ஆரம்பித்த பின்னர் அவர் எந்த ஒரு நடன அசைவுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர் மிக அழகாக ஆடிக்கொடுத்தார்.
View this post on Instagram
அது ஒரு டைம் பாம் போல் வேலை செய்துள்ளது” என்றார். முன்னதாக புஷ்பா வெற்றி விழா நிகழ்வில் சமந்தா குறித்து பேசிய அல்லு “சமந்தா காரு இந்த பாடலை செய்ததற்கு மிக்க நன்றி. நாங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காகத்தான் இந்தப் பாடலை நீங்கள் செய்தீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். எனவே அதற்கு நன்றி. இதை செய்வது சரியா தவறா என்று உங்களுக்கு எத்தனை சந்தேகங்கள் இருந்தது. அது எனக்கு படப்பிடிப்பின் போதே தெரிந்தது. அதனால்தான் உங்களிடம் ஒன்று மட்டும் சொன்னேன் ’என்னை நம்பி இதை செய்யுங்கள்’ என்றேன். அதன் பிறகு என்னிடம் ஒரு கேள்வி கூட கேட்கவில்லை. எல்லாவற்றையும் செய்ததற்கு நன்றி. நீங்கள் என் இதயத்தையும் மரியாதையையும் வென்றுள்ளீர்கள்” எனக் கூறியிருந்தார்.