Vikram Vedha | தொடங்கியது விக்ரம் வேதா இந்தி ரீமேக்.. நடிகர்கள் விவரம் இதுதான்!!
இந்நிலையில் படப்பிடிப்பு தொடர்பான தகவல் வெளியானது. அதன்படி, விக்ரம் வேதா ஹிந்தி ரிமேக்கின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதியின் கலக்கல் காம்போவில் வெளியான படம் ''விக்ரம் வேதா''. இந்த படம் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியானது. இதில் வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், கதிர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்றளவும் பிரபலம்.
Hero walking on to set after 2 years. I am walking in front of him .
— Hrithik Roshan (@iHrithik) October 15, 2021
Wait for it. #vikramvedha #teamisasliheroes
Shot by : Vinod Rawat pic.twitter.com/nG4BJgikbt
விக்ரம் வேதா படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் ரீமேக் உரிமை தயாரிப்பாளரான சஷி காந்திடம் இருந்தது. இதனிடையே ஹிந்தியில் ரீமேக் செய்வதற்கான உரிமையை பிரபல ரிலைன்ஸ் நிறுவனம் பெற்றது. ஹிந்தியில் ரீமேக்கை இயக்க புஷ்கர் மற்றும் காயத்ரி இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
ஆனால் யாரை மாதவன் மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பது என்ற திட்டமிடலில் ஈடுபட்டிருந்தனர் படக்குழு. குறிப்பாக விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என பல பிரபலங்களை அணுகியுள்ளனர் படக்குழு. இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு காரணமாக விக்ரம் வேதா குறித்த ரீமேக் அறிவிப்பு தாமதமானது.
#VikramVedha Hindi remake shooting begins today!
— OTT India 🇮🇳 (@OTTUpdates3) October 15, 2021
#SaifAliKhan as a righteous police officer and #HrithikRoshan and it's Releases on 30th September 2022! pic.twitter.com/GYlpLDSC8T
இந்நிலையில் படப்பிடிப்பு தொடர்பான தகவல் வெளியானது. அதன்படி, விக்ரம் வேதா ஹிந்தி ரிமேக்கின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் சைஃப் அலி கான், மாதவன் கதாபாத்திரத்திலும் ஹ்ரித்திக் ரோஷன் , விஜய் சேதுபதி கதாபாத்திரத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளார். கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரஃப் நடிக்கவுள்ளார். தற்போது யூஏஇ-ல் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் பிற்பகுதி படப்பிடிப்பு மும்பையில் நடக்கவுள்ளது.
and It begins …. #VikramVedha pic.twitter.com/45keF3j6Gu
— Sash (@sash041075) October 15, 2021