உலக நாயகன் பிறந்தநாள் பரிசு... வெளியானது விக்ரம் Glance!
கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் glance வெளியானது.
நடிகர் கமல்ஹாசன் நாளை தனது 67ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். இந்த பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக அவர் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தின் First Glanceஐ வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்படி, கமல் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று மாலை 6 மணிக்கு படத்தின் Glance வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அட்வான்ஸ் ஹேப்பி பர்த் டே உலக நாயகன் கமல்ஹாசான் சார். விக்ரம் உலகத்தின் முதல் பார்வை. அனைவரும் நாளை மாலை 6 மணி வரை காத்திருங்கள்’ எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், விக்ரம் படத்தின் First Glance இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த ட்வீட்டில், உங்களுக்கு எனது சிறிய பிறந்தநாள் பரிசு சார். பிறந்தநாள் வாழ்த்துகள் உலக நாயகன்” என குறிப்பிட்டுள்ளார்.
A small gift from me to you @ikamalhaasan sir ❤️
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 6, 2021
Happy Birthday Ulaganayagan 🙏https://t.co/hmoRIZAktJ#VikramFirstGlance#HBDKamalHaasan#KamalHaasan#Vikram_April2022#Vikram
கமலும் அதனை ரீட்வீட் செய்து, “அன்பிற்கு நன்றி லோகேஷ் கனகராஜ்” என குறிப்பிட்டுள்ளார். விக்ரம் Glanceஐ ட்விட்டரில் பலர் பகிர்ந்துவருகின்றனர்.
அன்பிற்கு நன்றி @Dir_Lokeshhttps://t.co/n6OQYyrvdj@VijaySethuOffl #FahadhFaasil @anirudhofficial @RKFI @turmericmediaTM @SonyMusicSouth @girishganges #Vikramglance #Vikram_April2022 https://t.co/WgCraYAYZJ
— Kamal Haasan (@ikamalhaasan) November 6, 2021
முன்னதாக, ‘விக்ரம்’ படக்குழுவினருடன் கமல் தனது பிறந்தநாளை கொண்டாடினார். கத்தி வைத்திருப்பது போன்ற தோற்றத்தால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் , அவர் கேக் வெட்டினார். அந்தக் கேக்கில் "once a lion always a lion " என்ற வசனங்களுடன் கூடிய விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்