![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vikram Box Office Record: கெத்து காட்டும் ஆண்டவர்.. 200 கோடியை நெருங்கும் விக்ரம்.. வசூல் விவரங்கள் உள்ளே..!
நடிகர் கமல் நடிப்பில் வெளியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படம் 165 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
![Vikram Box Office Record: கெத்து காட்டும் ஆண்டவர்.. 200 கோடியை நெருங்கும் விக்ரம்.. வசூல் விவரங்கள் உள்ளே..! Vikram Movie Box Office Collection First week Gross Records Highest ever in Tamil Language Vikram Box Office Record: கெத்து காட்டும் ஆண்டவர்.. 200 கோடியை நெருங்கும் விக்ரம்.. வசூல் விவரங்கள் உள்ளே..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/10/103e3bbe76070164e9abd9c3259dea0a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் கமல் நடிப்பில் வெளியாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படம் 165 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர்கள் கமல், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரது நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கும் இந்தப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
View this post on Instagram
165 கோடி வசூல்
வசூலிலும் பல சாதனைகளை படைத்துவரும் ‘விக்ரம்’ முதல் வாரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெற்றிகரமாக ஓடி 140.30 கோடிகளை வசூலித்துள்ளது. இந்த வசூலின் மூலம் முதல்வாரத்தில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் விக்ரம் 2 ஆம் இடத்தை பிடித்ததோடு விஜய் நடித்த பிகில் படத்தின் முதல்வார வசூலையும் முறியடித்து இருக்கிறது. முதலிடத்தில் ரஜினியின் 2.0 படம் இருக்கிறது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி விக்ரம் திரைப்படம் உலக அளவில் தோராயமாக 165 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் மட்டும் முதல்வாரத்தில் விக்ரம் திரைப்படம் 98 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
வசூல் விவரங்கள்:
வெள்ளி – 34.25 கோடி
சனி – 32 கோடி
ஞாயிறு – 35 கோடி
திங்கள் - 19.25 கோடி
செவ்வாய் – 17.25கோடி
புதன் – 15கோடி
வியாழன் – 11.75 கோடி
மொத்தம் -165 கோடி (தோராயமாக)
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)