Watch Video: "இந்த முறையும் ஐஸ்வர்யா ராய் எனக்கு கிடைக்கல..!" மேடையில் விக்ரம் கலகல..! வைரல் வீடியோ உள்ளே
நடிகர் விக்ரம் உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் கிடைக்காத தன்னுடைய கதாபாத்திரத்தின் அவல நிலை குறித்துப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'பொன்னியின் செல்வன்’ பட ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் விக்ரம், ஐஸ்வர்யா ராய் தனக்கு இந்தப் படத்திலும் கிடைக்கவில்லை என வேடிக்கையாகக் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வாரம் வருகிறான் சோழன்...
கோலிவுட்டே எதிர்பார்த்துக் காத்திருக்கும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இந்த வார இறுதியில் வரும் செப்.30ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதனையொட்டி படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் தொடங்கி திருவனந்தபுரம், ஹைதராபாத், மும்பை என படக்குழுவினர் பறந்து பறந்து தீவிர ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
படக்குழுவினர் தீவிர ப்ரொமோஷன்
Team Ponniyin Selvan Enroute to Mumbai for the Promotions 💟😍#Vikram #Trisha #ARRahman #AishwaryaRaiBachchan #PonniyinSelvan1 #PS1 #PS1FromSep30th @LycaProductions @MadrasTalkies_ @tipsmusicsouth @chiyaan @trishtrashers @arrahman pic.twitter.com/dCEWJBF9H0
— Cinebrity - Bollywood Updates (@cinebrity) September 24, 2022
ஐஸ்வர்யா ராய், விக்ரம், த்ரிஷா, ஜெயம், ரவி, மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் என படக்குழுவினர் இணைந்து ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இவர்களது கலகலப்பான பேச்சுகள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஹிட் அடித்து வருகின்றன.
அந்த வகையில் முன்னதாக நடிகர் விக்ரம் உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் கிடைக்காத தன்னுடைய கதாபாத்திரத்தின் அவல நிலை குறித்துப் பேசிய வீடியோ ரசிகர்களை நகைப்புள்ளாக்கி ஹிட் அடித்து வருகிறது.
சோகத்தில் விக்ரம்!
”நான் ராவணன் படத்துக்குப் பிறகு இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் நடித்துள்ளேன். ஆனால் என்னுடைய ஒரே பிரச்னை என்னவென்றால், இந்தப் படத்திலும் ஐஸ்வர்யா ராய் எனக்கு கிடைக்க மாட்டார்....
ஐஸ்வர்யா ராய் பற்றி மணிரத்னம் சொல்லும்போதெல்லாம், ”என் கதாபாத்திரம் நிஜமாக இறுதியில் இறந்துவிடுமா, எனக்கு அவர் கிடைப்பாரா” எனக் கேட்பேன். நான் எப்போதும் ஐஸ்வர்யா ராயுடன் இந்த மாதிரியான சோக ஹீரோவாகவே நடிக்கிறேன்.
’ஏன் இப்படி செய்கிறீர்கள் ஐஸ்?’
ஆனால், “இதுபற்றி யோசிக்கலாம்... இது ஏற்கெனவே எழுதப்பட்ட கதை என்பதால் என்னால் இதை மாற்றி அமைக்க முடியாது என நினைக்கிறேன்” என்று மணிரத்னம் கூறுவார்.
ஏன் இப்படி செய்கிறீர்கள் ஐஸ்?” எனக் குறும்பாக நடிகர் விக்ரம் பேசியுள்ளார்.
"I got to work with Aishwarya again after Raavanan. But my only gripe is here also I don't get her." 🤣🤣😭😭..
— Mohabbatein PS 1,VV on Sept 30 (@sidharth0800) September 24, 2022
~ Chiyaan Vikram#ChiyaanVikram𓃵 #AishwaryaRaiBachchan pic.twitter.com/xd0rRAExKQ
ராவணன் படத்திலும் ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரத்தின் மேல் காதல் கொள்ளும் வீரா கதாபாத்திரம் அவருடன் ஒன்று சேராமல் இறுதியில் இறந்து போய்விடும். இந்நிலையில் பொன்னியின் செல்வனில் நந்தினியின் மீது மையல் கொள்ளும் ஆதித்த கரிகாலனின் கதாபாத்திரம் குறித்து விக்ரம் இவ்வாறு பேசியுள்ளது கோலிவுட் ரசிகர்களை கலகலப்பில் ஆழ்த்தியுள்ளது.