Vijay Verma : என்னோட படத்தை விட, தமன்னா டேட்டிங்தான் இன்டரெஸ்டிங்டா இருக்கா? மனம் திறந்த விஜய் வர்மா!
Vijay Verma : நடிகர் விஜய் வர்மா முதல்முறையாக தமன்னா உடனான உறவு குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசினார்.
![Vijay Verma : என்னோட படத்தை விட, தமன்னா டேட்டிங்தான் இன்டரெஸ்டிங்டா இருக்கா? மனம் திறந்த விஜய் வர்மா! Vijay Verma opens up for the first time about Tamannaah bhatia and their relationship Vijay Verma : என்னோட படத்தை விட, தமன்னா டேட்டிங்தான் இன்டரெஸ்டிங்டா இருக்கா? மனம் திறந்த விஜய் வர்மா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/10/1ed86027c90a4d648ebad087a6111ddf1720607279508224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா . அவரும் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே லைம் லைட்டில் இருந்து வருகிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் இருக்கும் டேட்டிங் செய்து வருவதுதான். 'லஸ்ட் ஸ்டோரீஸ் 2' படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும் போது அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த இன்டிமேட் காட்சிகள் மிகவும் வைரலாக பரவி வந்தது.
தற்போது 'மிர்சாபூர் 3' படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நடிகர் விஜய் வர்மா நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டபோது நடிகை தமன்னா பாட்டியா உடனான தனது உறவை பற்றியும் டேட்டிங் வாழ்க்கை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
அது தொடர்பாக அவர் பேசுகையில் "என்னுடைய திரைப்படங்களின் ரிலீஸ் குறித்த விஷயங்களை காட்டிலும் என்னுடைய டேட்டிங் வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்ள தான் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் தற்போது அது பழகிவிட்டது. எங்கள் இருவருக்கும் இடையே அழகான, ஆழமான உறவு உள்ளது. மேலும் நாங்கள் இருவருமே மக்கள் மத்தியில் கவனம் பெறுவதை மனதார அனுபவிக்கிறோம்.
தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் எப்போது முதல் முறையாக டேட்டிங் செய்ய ஆரம்பித்தார்கள் என்பது குறித்து அவர் கூறுகையில் "லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் நடிக்கும் போது இருவரும் டேட்டிங் செய்யவில்லை. ஒரு பார்ட்டி வைத்து கொள்ளலாம் என்று தான் பேசி கொண்டோம். சொன்னபடியே பார்ட்டியையும் ஏற்பாடு செய்தோம். நான்கு பேர் மட்டுமே அதில் கலந்து கொண்டனர். அதற்கு காரணம் நான் தமன்னாவுடன் தனியாக நேரம் செலவழிக்க விரும்பினேன். அதற்கு பிறகு ஒரு 20 நாட்கள் கழித்து நாங்கள் இருவரும் டேட்டிங் சென்றோம்" என கூறி இருந்தார்.
தமன்னா பாட்டியா - விஜய் வர்மா இருவரும் அவர்களின் காதலை உறுதி செய்தாலும் திருமணம் குறித்த எந்த அறிவிப்பையும் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)