Vijay tv baakiyalakshmi Serial : காத்துவாக்குல காதல்... ரெண்டு காதலில் விழுந்த 'பாக்கியலட்சுமி' கோபி.. தெறிக்கும் மீம்ஸ்கள்..!
ஆஹா கோபி.. நீதான்யா என் ஹாபி.. பொய் சொன்னா, உன்ன மாதிரி சொல்லி தான்யா சொல்லி எஸ்கேப் ஆகணும் என்று பலரும் பாக்கியலட்சுமி சீரியல்களில் வரும் கோபி கதாபாத்திரத்தை கோவில் கட்டி கும்பிட்டு வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் பாக்கிய லட்சுமி சீரியலும் ஒன்று. இந்த சீரியலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு நிலவுகிறது. ஒரு பெண் தனது வாழ்வின் வெவ்வேறு காலக்கட்டங்களில் சந்திக்கும் சவால்களை கொண்டு இந்த சீரியலின் கதை பின்னப்பட்டுள்ளது.
தற்போது, அந்த சீரியலில் பரபரப்பான எபிசொடுகள் இந்த வாரம் ஓடி கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் கணவருக்கு எந்தவொரு ஆபத்து வந்துற கூடாதுன்னு பாக்கியலட்சுமி தாலி பாக்கியம் வாங்க, கோபியை பாக்கியலட்சுமிகிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கிட்டு வாங்க என்று ராதிகா மறுபக்கம் ஏங்க, இதைப்பார்த்து கண்ணீர் சிந்தும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் பொங்க தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
View this post on Instagram
பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் :
ஏன்டா பாக்கியலட்சுமி மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க அவனவன் தவம் கிடக்குறான். நீ என்னன்னா பாக்கியலட்சுமியை டைவர்ஸ் பண்ண பாக்குறியா என்று உண்ட சோறு கையில் காய்ந்தது கூட தெரியாமல் தீவிர பாக்கியலட்சுமி பக்தர்கள் கோபியை தாறுமாறாக சபித்து வருகின்றனர்.
View this post on Instagram
மறுபக்கம் சும்மா இல்லாமல் நமது 90 ஸ் கிட்ஸ் நெட்டிசன்கள் ராதிகா மாதிரி ஒரு ஆன்ட்டி கிடைச்சா அந்த ஆண்டவனே இறங்கி வருவான்.. இந்த கோபி இறங்கி வரமாட்டனா என்று கோபிக்கு வக்காளத்து வாங்கி வருகின்றனர்.
மேலும், ஒரு சிலர் வேற லெவலுக்கு யோசித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்திருக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்பட போஸ்டரை எடிட் செய்து அதை சமூக வலைதளங்களில் பரவி வருகின்றனர்.
கோபி என்னும் மச்சக்காரன் :
ஆஹா கோபி.. நீதான்யா என் ஹாபி.. பொய் சொன்னா, உன்ன மாதிரி சொல்லி தான்யா எஸ்கேப் ஆகணும் என்று பலரும் பாக்கியலட்சுமி சீரியல்களில் வரும் கோபி கதாபாத்திரத்தை கோவில் கட்டி கும்பிட்டு வருகின்றனர். நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தொடரில் ராதிகா குழந்தை மயூரிக்கு பிறந்தநாள் பரிசை வழங்க அவரது முன்னாள் கணவன் ராஜேஷ் செல்ல, அதை தடுத்து நிறுத்துகிறார் கோபி.
இதனால் கோபமடைந்த ராஜேஷ், நேராக கோபியின் வீட்டுக்கு வந்து உடல்நிலை சரி இல்லாத கோபியின் தந்தையிடம் சில உண்மைகளை உடைத்து பிரச்சனை செய்கிறார். அதன்பிறகு, பாக்கியலட்சுமி ஓடிவந்து அந்த நபர் யார் என்று கேள்வி எழுப்ப, சிறிது நேரம் அங்கு பிரச்சனையாகி ராஜேஷ் அங்கிருந்து செல்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்