மேலும் அறிய

Phoenix Veezhan Teaser: விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் பீனிக்ஸ் விழான்! டீசர் எப்படி இருக்குது? குட்டி விமர்சனம்!

பிரபல நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா நாயகனாக அறிமுகமாகியுள்ள பீனிக்ஸ் வீழான் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா. இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியுடன் இணைந்து சிந்துபாத் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த நிலையில், விஜய் சேதுபதி மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகும் பீனிக்ஸ் வீழான் என்ற படம் உருவாகியுள்ளது.

விஜய் சேதுபதி மகனின் பீனிக்ஸ் வீழான்:

பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. நாயகனாக அறிமுகமாகியுள்ள முதல் படமே ரத்தம் தெறிக்க விஜய் சேதுபதி மகன் இந்த படத்தில் களமிறங்கியுள்ளார். டீசரின் தொடக்க காட்சியே சிறுவர் சீர்த்திருத்த சிறையுடன் தொடங்குகிறது. கையில் விலங்குடன் குற்றவாளியாக சீர்த்திருத்த பள்ளியில் முகத்தை மூடிய நிலையில் விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் அறிமுகம் உள்ளது.

எப்படி இருக்குது டீசர்?

அந்த காட்சியே இந்த படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படம் என்பதை உணர்த்துகிறது. அதற்கு அடுத்த காட்சியிலே சூர்யாவின் சண்டை காட்சிகளும், அவர் பாக்ஸிங் வீரர் என்பதற்கான காட்சிகளும் காட்டப்படுகிறது. பாக்ஸிங் காட்சிகளுக்காக ஒரு பாக்ஸிங் வீரரைப் போல சூர்யா உழைத்திருக்கிறார் என்பதை அந்த காட்சி நமக்கு நன்றாகவே உணர்த்துகிறது. சூர்யாவின் வேகமான பஞ்ச்கள் அவரது உழைப்பை காட்டுகிறது.

படத்தின் பாதி டீசரிலே ஒரு பாக்ஸிங் வீரரின் கதை என்பது மிக நன்றாக நமக்கு தெரிகிறது. படத்தில் அதிகளவு ரத்தமும், வன்முறையும் உள்ளது என்பதை படத்தின் டீசர் நமக்கு சொல்கிறது. இந்த டீசரில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ண்ணோவ்.. உங்களுக்கு இது வெறும் கேம். எங்களுக்கு இது லைஃப் என்று பேசும் ஒரு வசனம் உள்ளது. சூர்யாவின் கண்கள் அப்படியே விஜய் சேதுபதியின் சாயலில் இருப்பது அவருக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது.

யார்? யார்? நடிகர்கள்:

இருப்பினும், ரத்தம், பாக்ஸிங் என்று உருவாகியுள்ள இந்த பீனிக்ஸ் வீழான் அனைத்து தரப்பு மக்களையும் கட்டிப்போடுமா? என்பது படம் வெளியான பிறகே தெரிய வரும். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்தில் வரலட்சுமிக்கும், சம்பத்துக்கும் மிகவும் முக்கியமான கதாபாத்திரம் என்பது டீசரிலே நன்றாக தெரிகிறது. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இந்த படத்தை ஏகே ப்ரேவ்மேன் பிக்சர்ஸ் சார்பில் ராஜலட்சுமி அனல் அரசு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல தொகுப்பாளர் பிரவீன் எடிட் செய்துள்ளார். இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசே இந்த படத்திற்கு சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள முதல் படமே முழுக்க முழுக்க ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் படமாக சூர்யா தேர்வு செய்துள்ளார். இது அவருக்கு கைகொடுக்குமா? என்பது படம் வெளியான பிறகே தெரிய வரும்.

 

தலைப்பு செய்திகள்

DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
டேங்க் ஃபுல் செய்தால் 1200 கி.மீ; 30 மாதங்களில் 4 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை- எந்த கார் தெரியுமா?
Embed widget