Phoenix Movie Review : அப்பா பெயரை காப்பாற்றினாரா சூர்யா..ஃபீனிக்ஸ் படம் எப்படி இருக்கு..இதோ விமர்சனம்
Phoenix Movie Review : விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நாயகனாக நடித்துள்ள ஃபீனிக்ஸ் படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்

ஃபீனிக்ஸ் திரைப்பட விமர்சனம்
விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ஃபீனிக்ஸ் . அனல் அரசு இந்த படத்தை இயக்கியுள்ளார். வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூனர் ரமேஷ், அபினக்ஷத்ரா, வர்ஷா, நவீன், ரிஷி, நந்தா சரவணன், முருகதாஸ், விக்னேஷ், ஸ்ரீஜித் ரவி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். ஜூலை 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ஃபீனிக்ஸ் படத்தின் விமர்சனங்கள் வெளியாக தொடங்கியுள்ளன.
ஃபீனிக்ஸ் படத்தின் கதை
வடசென்னையை கதைக்களமாக கொண்டு ஏற்கனவே பல படங்களில் பேசப்பட்ட ஒரு கதையே ஃபீனிக்ஸ் படத்தின் கதையும். கதை வழக்கமானதாக இருந்தாலும் படத்தில் அனைவரையும் கவர்ந்திருப்பது ஆக்ஷன் காட்சிகள்தான். முதல் பாதியில் சூர்யாவுக்கு ஒரு வசனம் கூட இல்லை. ஆனால் ஆக்ஷன் காட்சிகள் என்று வரும்போது சூர்யா சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் ஆக்ஷன் காட்சியில் சூர்யா கடினமான ஆக்ஷன் காட்சிகளில் சூப்பராக நடித்துள்ளார். ஆக மொத்தம் ஃபீனிக்ஸ் படத்தின் கதை திரைக்கதை சுமாராக இருந்தாலும் தனது ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களை கவர்கிறார்கள் படத்தின் நாயகன் சூர்யா மற்றும் இயக்குநர் அனல் அரசு.
#Phoenix - The film has solid stretch of action sequences as it’s choreographed and directed by #AnlArasu. Debutant @suryaVoffcial doesn’t have even a single dialogue in the first half but when it comes to action sequences he shines. Especially the climax action stretch at the… pic.twitter.com/a8tJhghf7V
— Rajasekar (@sekartweets) July 3, 2025
#PHOENIX – வீழான்
— Bakkiyaraj Kannan (@Bakkiyaraj_k) July 3, 2025
Just like the title, the film rises… again and again — stronger with every turn!
As expected, Anl Arasu Master sets the screen on fire with his stunt choreography — but the emotional core of the film also made you a winner as a director. congrats master… pic.twitter.com/FN6tvngpHR






















