மேலும் அறிய

Vijay: நாளைய தீர்ப்பு முதல் கோட் வரை: செம ஃபிட்டாக வலம் வரும் விஜய்யின் ஃபிட்னெஸ் ரகசியம் தெரியுமா?

Vijay Fitness Secret : நாளைய தீர்ப்பு படம் முதல் தற்போதைய கோட் படம் வரை அதே ஃபிட்னெஸ்ஸை மெயிண்டெய்ன் செய்யும் நடிகர் விஜய்யின் ஃபிட்னெஸ் சீக்ரெட் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகராக சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரின் ஃபேவரட் நடிகராக, செல்லப் பிள்ளையாக வலம் வருபவர் நடிகர் விஜய். சமீப காலமாக விஜய் நடிக்கும் திரைப்படங்கள் மாஸான வரவேற்பைப் பெற்று பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.

தன் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான 'நாளைய தீர்ப்பு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் நடிகர் விஜய். ஆரம்பக் காலகட்டத்தில் மசாலா கலந்த கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தவருக்கு ஒரு டர்னிங் பாயிண்ட் படமாக அமைந்தது பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை உள்ளிட்ட திரைப்படங்கள்.

பேமிலி ஆடியன்ஸை கவரத் தொடங்கிய விஜய்க்கு பெண் ரசிகர்களின் சப்போர்ட் அதிகமாக கிடைத்தது. தொடர்ச்சியாக அமைதியான கதாபாத்திரங்களில் மென்மையான கேரக்டர்களில் நடித்து வந்த விஜய் படிப்படியாக மாஸ் ஹீரோ அந்தஸ்தை பெற்றார். 'பிரியமுடன்' படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்ததும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுப் கொடுத்தது.

Vijay: நாளைய தீர்ப்பு முதல் கோட் வரை: செம ஃபிட்டாக வலம் வரும் விஜய்யின் ஃபிட்னெஸ் ரகசியம் தெரியுமா?

அசத்தலான டான்ஸ், நக்கலும் நையாண்டியும் கலந்த பேச்சு, அதிரடியான ஆக்ஷன் சீக்வன்ஸ், ரொமான்டிக் ஹீரோ என ஏராளமான பிளஸ் கொண்ட விஜய்யை ரசிகர்கள் கொண்டாடினர். அதுவே அவரின் அடித்தளத்தை மேலும் பலமாக்கியது. 90ஸ் காலகட்டம் முதல் இன்று வரை ஸ்டார் நடிகராக ஸ்டெடியாக பயணித்து வரும் நடிகர் விஜய்யின் வெற்றிக்கு மற்றுமொரு முக்கியமான காரணம் அவரின் ஃபிட்னெஸ். அன்று பார்த்தது முதல் இன்று வரை அதே பிட்னெஸ் உடன் காணப்படுகிறார். அதற்கு அவரின் ஸ்ட்ரிக்ட்டான டயட் மற்றும் ரெகுலர் உடற்பயிற்சி ஒரு முக்கியமான காரணம்.

தூங்குவது, சாப்பிடுவது, ஓய்வு எடுப்பது என அனைத்தையுமே முறையாக செய்பவர் விஜய். இரவு 7 மணிக்கு மேல் சாப்பிடுவது கிடையாது. ஷார்ப்பாக இரவு 9.30 மணிக்கு படுத்து காலை 5.30 மணிக்கெல்லாம் எழும் பழக்கம் கொண்டவர். சில ரெகுலர் உடற்பயிற்சிகளை நாள்தோறும் தவறாமல் செய்துவிடுவாராம். வெளிநாடுகளில் ஷூட்டிங் சென்றாலும் காலை எழுந்து அவரின் வழக்கமான ஒர்க் அவுட்களை செய்ய தவிர விடமாட்டாராம்.

Vijay: நாளைய தீர்ப்பு முதல் கோட் வரை: செம ஃபிட்டாக வலம் வரும் விஜய்யின் ஃபிட்னெஸ் ரகசியம் தெரியுமா?

அதே போல உணவு விஷயத்திலும் மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக டயட் ஃபாலோ செய்பவர் விஜய். அம்மாவின் கை மணம் வீச அசைவ உணவுகளை விருப்பத்துடன் சாப்பிடும் விஜய், சமீப காலமாக அசைவம் சாப்பிடுவதை குறைத்து விட்டார். ஹோட்டலில் சாப்பிடுவதை பெரும்பாலும் தவிர்த்துவிடுவாராம்.

அவருக்கு டீ, காபி குடிக்கும் பழக்கம் எல்லாம் அறவே கிடையாது. மிகவும் பிடித்தமான ஒரு உணவு என்றால் அது தோசை. அதை மிகவும் விருப்பத்துடன் சாப்பிட்டாலும் இரண்டு தோசைகள் மட்டுமே சாப்பிடுவாராம். இப்படி தான் ஸ்ட்ரிக்ட்டான சில வழிமுறைகளை தவறாமல் பாலோ செய்து இன்று வரை ஃபிட்டாக தனது பாடியை மெயின்டெய்ன் செய்து வருகிறார். இது தான் அவரின் ஃபிட்னஸ் ரகசியம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bus Accident : நடுரோட்டில் கவிழ்ந்த ஆம்னி பஸ்கதறி தவித்த பயணிகள்பதறவைக்கும் காட்சிகள்Allu Arjun vs revanth Reddy : 21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Embed widget