Vijay Shankar Reunion: நாங்க அரசியல் படத்துல நடிப்போம்.. அரசியலில் நடிக்க மாட்டோம்.... மீண்டும் ஷங்கர் விஜய் கூட்டணி..
நடிகர் விஜயின் 70-வது படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
![Vijay Shankar Reunion: நாங்க அரசியல் படத்துல நடிப்போம்.. அரசியலில் நடிக்க மாட்டோம்.... மீண்டும் ஷங்கர் விஜய் கூட்டணி.. Vijay Director Shankar Reunion Thalapathy 70 After Indian 2 Game Changer Shankar will begin full Scriptin Vijay Shankar Reunion: நாங்க அரசியல் படத்துல நடிப்போம்.. அரசியலில் நடிக்க மாட்டோம்.... மீண்டும் ஷங்கர் விஜய் கூட்டணி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/12/f370f62680ff4a6dbf5559303d25da761689160040564572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இளைய தளபதி விஜயின் 70-வது படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நண்பன் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஷங்கர் விஜய் கூட்டணி இணையுமா? என்று எதிர்பார்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.
படப்பிடிப்பை முடித்த விஜய்
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் நடிகர் விஜய். அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.இது அவருக்கு 68-வது படம். இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பதை விட்டு அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த செய்திகள் ஒரு பக்கம் இருக்க தற்போது விஜயின் அடுத்த படம் குறித்தான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
விஜய் 70 இயக்க இருக்கும் ஷங்கர்
இயக்குநர் ஷங்கர் விஜய்க்கு ஒரு ஒன்லைன் சொல்லியிருப்பதாகவும், அது விஜய்க்கு பிடித்திருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தகவல் வெளியாகியிருக்கிறது. விஜயின் 69 அல்லது 70-வது படமாக இந்த படம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் களத்தை மையமாகக்கொண்ட ஒரு கான்செப்டாக இந்தப் படம் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. தற்போது இந்தியன் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள ஷங்கர் ராம் சரன் நடிக்கும் கேம் சேஞ்சர் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படங்களை முடித்தப் பின்னர் இந்தப் படத்திற்கான முழுத் திரைக்கதையை எழுத இருக்கிறார் ஷங்கர்.
இரண்டாவது முறையாக இணையும் கூட்டணி..
கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் முதல் முறையாக இணைந்தது ஷங்கர் விஜய் கூட்டணி. இந்தியில் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய 3 இடியட்ஸ் என்கிற படத்தின் ரீமேக் செய்தார் ஷங்கர். இந்தியில் வெளியான படத்திற்கு ஏற்கெனவே தமிழ் ரசிகர்கள் இருந்தும் நண்பன் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தற்போது கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணை இருக்கிறது இந்தக் கூட்டணி. அதே மாதிரியான ஒரு ப்ளாக்பஸ்டர் ஹிட் படத்தை இந்த முறையும் நாம் எதிர்பார்க்கலாம்.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. விஜய் , த்ரிஷா, கெளதம் மேனன், மிஸ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் முதலியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். லியோ படத்தின் முதல் பாடலான நான் ரெடி பாடல் கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)