முதலுக்கே மோசம்.. லைகர் தயாரிப்பாளர்களின் தலையில் துண்டு? பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் எப்படி?
ஏமாற்றத்தை அளித்த விஜய் தேவரகொண்டாவின் லைகர்
திரைக்கதையில் பலரின் எதிர்ப்பார்பை ஏமாற்றிய லைகர் படம் தனது முதல் வார பாக்ஸ் ஆஃபிஸ் வசூலிலும் பயங்கர பின்னடைவை பெற்றுள்ளது.
படம் வெளியான முதல் வாரத்தில் 46 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. முதல் வாரத்தில் 4 நாட்கள் இருந்தும் மிக குறைவான பணத்தை வசூல் செய்து பொருளாதார ரீதியாகவும் பின்னடைந்துள்ளது லைகர்.
View this post on Instagram
முதல் நாளில் விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்களால் சுமாரான வசூலை பெற்ற இப்படம், நெகட்டிவான விமர்சனத்தால் இரண்டாவது நாளில் வசூல் ரீதியாக பெரும் சரிவை பெற்றது. வியாழன் அன்று வெளியான இப்படம் சனி ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் தேறிவிடும் என்று எதிர்ப்பார்பையும் ஏமாற்றியது.
இந்த தோல்விக்கு மற்றொரு காரணம் கார்த்திகேயா 2 படம் என்றே சொல்லலாம். இப்படம் ஆந்திராவில் 3-வது வாரத்திலும்
களைகட்டிவருகிறது. கார்த்திகேயா 2 பயங்கர டஃப் கொடுக்க லைகர் சல்லி சல்லியாக நொருங்கிவிட்டது.
லைகர் படமானது அதன் முதல் வாரத்தில் 50 கோடி ரூபாயை மட்டும் வசூல் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நிலையில் 60 கோடி ரூபாயை சுருட்டிக்கொண்டு ஓரமாக ஒதுங்கிவிடும் என்பது சினிமா ஆய்வாளர்களின் கருத்தாகும்.
View this post on Instagram
சில நாட்களுக்கு முன்பு வெளியான லெஜண்ட் படத்தை பலரும் கலாய்த்து தள்ளினர். ஆனால் லைகர் படத்தை விட லெஜண்ட் படம் அதிக ஐஎம்டிபி ரேட்டிங்-ஐ பெற்றுள்ளது. அனன்யா பாண்டேவின் நடிப்பும் சுமாராக இருந்தது. ஆக லைகர் படத்துக்கு பல குறைகள் இருந்து வரும் நிலையில் தயாரிப்பாளர்களின் தலையில் துண்டு விழுந்துள்ளது.