Priyamani : விஜய் என்னை அப்படித்தான் கூப்பிடுவார்.. வெட்கப்பட்ட பிரியாமணி.. ஜனநாயகன் ரொம்ப ஸ்பெஷல்
ஜனநாயகன் படப்பிடிப்பின் போது விஜய் என்னை அந்த பெயர் சொல்லி அழைப்பதாக நடிகை பிரியாமணி தெரிவித்துள்ளார்.

பருத்திவீரன் படத்தில் முத்தழகு என்ற கதாப்பாத்திரல் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை வென்றவர் பிரியாமணி. இப்படத்தின் மூலம் இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து ராவணா, தோட்டா, மலைக்கோட்டை பாேன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழை தாண்டி இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளிலும் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார் பிரியாமணி. தற்போது விஜய்யுடன் ஜனநாயகன் படத்திலும் நடித்திருக்கிறார். குட் வைஃப் வெப் தொடரில் நடித்தது தொடர்பாக அளித்த பேட்டியில் சினிமா பயணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
பாரதிராஜா படத்தில் அறிமுகம்
பிரபல சேனலில் பேட்டியளித்த பிரியாமணி, தயவு செய்து விக்கிபீடியாவை நம்பாதீங்க. சில நேரங்களில் அது சரியான தகவலை தருவதில்லை. நான் முதலில் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கண்களால் கைது செய் படத்தின் மூலம் அறிமுகம் ஆனேன். அப்படத்தில் உதவி இயக்குநராக இருந்த சித்ரா லட்சுமணன் சார் மூலம் தான் எனக்கு தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு தெலுங்கு, தமிழ் படங்களிலும் நடிக்க தொடங்கினேன். நடிப்பை பொறுத்தவரையில் கதை நல்லா இருக்கா, இந்த படத்தில் என் ரோல் நன்றாக இருந்தால் பண்ணுவேன். ஆனால், ஒரு சில இடத்தில் தவறி இருக்கிறது. அதையெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
பருத்திவீரன் படம் 160 நாள் சூட்டிங்
என் லைஃப்ல ரொம்ப சேலஞ்சிங்கான ரோல் என்றால் முத்தழகு தான். அந்த கதாப்பாத்திரம் மனதளவிலும், உடலாலும் நிறைய பாதிப்பை தந்திருக்கிறது. அந்த படத்திற்காக 160 நாள் சூட்டிங் நடந்தது. ஒரு நாள் லைட்டிங் நல்லா இருக்கும் போது படப்பிடிப்பு நடக்கும். மறுநாள் அதே லைட்டிங்காக வெயிலில் காத்திருக்கிறோம். நான் நிறைய விசயங்களை பல இயக்குநர்களிடம் இருந்து கற்றுக்கொள்கிறேன். எனக்கு பிடித்த கதாப்பாத்திரங்கள் நிறைய இருக்கிறது. சில தேவைகளும் இருக்கு, அதற்காக படங்களில் கமிட் ஆகி நடிக்கணும் என பிரியாமணி தெரிவித்தார்.
முத்தழகு என அழைக்கும் விஜய்
விஜய் குறித்து பேசிய பிரியாமணி, நான் நடிகர் விஜய்யின் தீவிரமான ரசிகை. அவருடன் சேர்ந்து நடித்த அனுபவத்தை மறக்க முடியாது. அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் என்றாலும், மிகவும் எளிமையானவர். ஜனநாயகன் ஒரு ஸ்பெஷல் படம். இதில் நான் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது என் கரியரில் முக்கியமான படமாக இருக்கும் என நம்புகிறேன். படப்பிடிப்பு தளத்தில் விஜய் என்னை முத்தழகு என்றுதான் அழைப்பார் என கூறியுள்ளார்.
பிரியாமணி விளக்கம்
இந்தி சினிமாவில் தென்னிந்தியர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதுகுறித்து உங்களுடைய கருத்து என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரியாமணி, இதுபோன்று பலர் சொல்லி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நான் இந்தியில் 2 படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு அந்த மாதிரி நடந்தது கிடையாது. எல்லோரையும் போலத்தான் என்னுடன் பழகினார்கள். சொன்னா நம்ப மாட்டீங்க சில பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய நடிகர்கள் மீது மிகப்பெரிய அளவில் மதிப்பு வைத்துள்ளனர். என்னுடைய சினிமா அனுபவத்தில் நீங்கள் கேட்பது போன்ற அவமரியாதை நடந்தது இல்லை என பிரியாமணி தெரிவித்துள்ளார்.





















