Nayanthara: தங்கமே தங்கமே.. குழந்தைகளுடன் க்யூட் நயன்.. பிறந்தநாள் ஃபோட்டோ பகிர்ந்த விக்னேஷ் சிவன்!
Nayanthara Birthday: தன் இரட்டைக் குழந்தைகள் மற்றும் கணவருடன் இன்று நயன்தாரா தன் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்.
நடிகை நயன்தாரா (Nayanthara) இன்று தன் 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு ரசிகர்கள் போட்டிபோட்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஏனென்றால் உன் பிறந்தநாள்...
சினிமா தாண்டி தன் தனிப்பட்ட வாழ்வையும் ஒளிவுமறைவின்றி பகிர்ந்து ரசிகர்களைக் கொண்டாடவைத்த வெகு சில நடிகைகளில் ஒருவர் நயன்தாரா.
தமிழ் சினிமாவில் 2004ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்த நயன்தாரா அப்போது தொடங்கி இந்த ஆண்டு வெளியான ஜவான் வரை சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார்.
முட்கள் நிறைந்த பாதை..
2003ஆம் ஆண்டு ஆண்டு மலையாள சினிமாவில் தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கிய நயன், தமிழ், தெலுங்கு எனப் பயணித்து இந்த ஆண்டு தென்னிந்தியா தாண்டி பாலிவுட்டிலும் கால் பதித்து வெற்றியை சுவைத்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக வெற்றி நாயகியாக வலம் வருவதோடு மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஹீரோயின் சார்ந்த கதைகள் வர அடித்தளமிட்டவர்களில் முக்கியமானவர் நயன்.
இப்படி பல காரணங்களால் லேடி சூப்பர் ஸ்டார் எனக் கொண்டாடப்படும் நயன்தாராவை கோலிவுட் ரசிகர்கள் இன்று வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர். தன் காதல் கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தன் இரட்டைக் குழந்தைகளுடன் இன்று நயன் தன் பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்.
பிறந்தநாள் ஸ்பெஷல் என்ன?
இந்நிலையில் நயன்தாராவை வாழ்த்தி, அவரது பர்த்டே ஸ்பெஷல் புகைப்படத்தை நயனின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். “பிறந்த நாள் வாழ்த்துகள் என் தங்கமே” எனும் கேப்ஷனுடன் இடுப்பில் இரட்டைக் குழந்தைகளை சுமந்தபடி தானும் அருகில் மனைவி நயன்தாராவும் இருக்கும்படியான புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
விக்னேஷ் சிவனின் இந்தப் பதிவு இணையவாசிகளின் இதயங்களை அள்ளி வைரலாகி வருகிறது.
அடுத்தடுத்த படங்கள்
நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து அன்னபூரணி, டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இந்நிலையில் இப்படக்குழுவினர் நயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக போஸ்ட்கர்களைப் பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இன்ஸ்டாகிராமில் காலடி எடுத்து வைத்துள்ள நயன்தாரா, தன் குழந்தைகள் மற்றும் கணவருடன் மகிழ்ந்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து தன் ரசிகர்களுடன் கடந்த சில மாதங்களாக உரையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Conjuring Kannappan : ரகளையான பேய் படம்தான்.. ஆனால் குழந்தைகள் பார்க்கலாமா? கான்ஜூரிங் கண்ணப்பன் சென்சார் என்ன சொல்லுது?