KVRK | காத்துவாக்குல ரெண்டு காதல் : செம்ம அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்..!
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் குறித்த ஒரு சுவாரசியமான அப்டேட்டை கொடுத்துள்ளார் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பேபி நிறுவனம், 7 Screen Studios நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம்தான் ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த படத்துக்கான பணிகள் தொடங்கி நடந்து வருகின்றது. விக்னேஷ் சிவன் எழுதி இயக்கிவரும் இந்த திரைப்படம் காதல் காட்சிகள் ததும்பும் ரொமான்டிக் திரைப்படமாக உருவாகிவருவது குறிப்பிடத்தக்கது.
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதையின் நாயகனாக களமிறங்க லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் பிரபல நடிகை சமந்தா இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். மேலும் 8 தேசிய விருதுகளை பெற்ற ஸ்ரீகர் பிரசாத் இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ஸ்ரீகர் பிரசாத் இந்த படத்தின் மாபெரும் பலமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயன், த்ரிஷா மற்றும் நயன்தாராவை கொண்டு ஒரு முக்கோண காதல் கதையை உருவாக்க முடிவு செய்தார். ஆனால் இறுதியில் கடந்த 2016ம் ஆண்டு விஜய்சேதுபதி காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற தலைப்பில் உருவாக உள்ள படத்தில் நடிப்பார் என்று விக்னேஷ் சிவன் அறிவித்தார். சுமார் 4 ஆண்டுகள் கழித்து படத்திற்கான பணிகள் தொடங்கி தற்போது நடந்து வருகின்றது.
Happy Valentine’s Day :)
— Vignesh Shivan (@VigneshShivN) February 14, 2020
Joining with all these lovely people again :) #kaathuvaakulaRenduKaadhal #KRK@vijaysethuoffl #Nayanthara @samanthaprabhu2 @vigneshShivn @anirudhofficial @lalit_sevenscr @7screenstudio @Rowdypictures @iamarunviswa @gopiprasannaa @sureshchandraa pic.twitter.com/JWtsvXRibG
Yesudas songs | கண்களை சொக்க வைக்கும் யேசுதாஸின் குரல் - இதோ ப்ளேலிஸ்ட்!
இந்நிலையில் நேற்று விக்னேஷ் சிவனிடம் ரசிகர் ஒருவர் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அடுத்த சிங்கிள் எப்போது வெளியாகும் என்று கேட்ட கேள்விக்கு 'ஜூலை மாதம்' என்று பதில் அளித்து ரசிகர்களை படுகுஷியில் ஆழ்த்தியுள்ளார் விக்னேஷ் சிவன். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகி அசத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்தமாதம் வெளியாகவிருக்கும் அடுத்த சிங்கிள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படம் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.