Vetrimaaran: 'மூச்சுவிடும் நேரத்துக்குள் பகைவரால் அழிக்கப்படுவர்' - திருக்குறள் பகிர்ந்து வெற்றிமாறனை வாழ்த்திய விடுதலை படக்குழு
திருக்குறள் ஒன்றைப் பகிர்ந்து இயக்குநர் வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது விடுதலைப் படக்குழு.
![Vetrimaaran: 'மூச்சுவிடும் நேரத்துக்குள் பகைவரால் அழிக்கப்படுவர்' - திருக்குறள் பகிர்ந்து வெற்றிமாறனை வாழ்த்திய விடுதலை படக்குழு viduthalai team wishes director vetrimaaran on his birthday sharing thirukkural Vetrimaaran: 'மூச்சுவிடும் நேரத்துக்குள் பகைவரால் அழிக்கப்படுவர்' - திருக்குறள் பகிர்ந்து வெற்றிமாறனை வாழ்த்திய விடுதலை படக்குழு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/04/47aedb0d26726f50508df69c13f026801693812218064572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வெற்றிமாறன் பிறந்தநாள்
இயக்குநர் வெற்றிமாறன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பொல்லாதவன் படத்தில் தொடங்கி வெற்றிமாறன் இதுவரை ஆறு படங்களை இயக்கியிருக்கிறார் வெற்றிமாறன். ஆறும் வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ஒவ்வொரு படத்தின் வழியாகவும் சினிமாவின் புதிய சாத்தியங்களை கண்டடைவதுடன் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தி வருகிறார் வெற்றிமாறன். இயக்குநராக ரசிகர்களைக் கொண்ட வெகு சிலரில் முக்கியமானவராக வெற்றிமாறன் கொண்டாடப்படுவதற்கு முழு காரணம், இவர் பார்வையாளர்களின் அறிவை குறைத்து மதிப்பிட்டு கதைகள் எழுதுவதில்லை.
இவர் படங்கள் பல புதிய களங்களை, காலங்களை, காணாதவற்றை ஆச்சர்யமானவற்றை யதார்த்தமாக பதிவு செய்கின்றன. நாவல்களை, சிறுகதைகளை படமாக்குதல் என்பதை ஒரு ட்ரெண்டாகவே உருவாக்கினார் வெற்றி. அவர் அளவுக்கு தற்கால இயக்குனர்கள் யாராலும் அந்த வித்தையை நேர்த்தியாக செய்ய முடியவில்லை.
விடுதலை 2
இந்நிலையில், விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து இருக்கிறார் வெற்றிமாறன். இந்தப் படத்தின் சில காட்சிகள் தனக்கு திருப்தியாக இல்லாத காரணத்தினால் ஒரு சில காட்சிகளை மீண்டும் இயக்க முடிவு செய்தார் வெற்றிமாறன். இப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்துள்ளனர். இந்நிலையில் இன்று வெற்றிமாறனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு விடுதலை படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
திருக்குறளைப் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து
’உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார் “
என்கிற திருக்குறளைப் பகிர்ந்து இயக்குநர் வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் விடுதலைப் படக்குழுவினர். ‘ தன்னை பகைப்பவரின் செருக்கை ஏளனமாய் எண்ணி அழிக்காமல் விடுபவர், மூச்சு விடும் நேரத்துக்குள் பகைவரால் நிச்சயம் அழிக்கப்படுவர் என்பதே இந்த திருக்குறளின் பொருள்.
மேலும் விடுதலப் படத்தின் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி ஆகியோரும் வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
Team #ViduthalaiPart2 wishing #VetriMaaran sir a very happy birthday 🎂 #HBDVetriMaaran
— VijaySethupathi (@VijaySethuOffl) September 4, 2023
An @ilaiyaraaja Musical@sooriofficial @elredkumar @rsinfotainment @BhavaniSre @Chetan_k_a @VelrajR @DirRajivMenon @menongautham @jacki_art @GrassRootFilmCo @RedGiantMovies_ @mani_rsinfo… pic.twitter.com/iJm1AKT2ma
வெற்றிமாறன் அடுத்து
விடுதலைப் படத்தைத் தொடர்ந்து வாடிவாசல், வட சென்னை 2 , உள்ளிட்ட படங்களை இயக்க இருக்கிறார் வெற்றிமாறன். இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படங்களின் அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)