Vidamuyarchi Trailer : ஹாலிவுட் தரத்தில் காட்சிகள்.. பின்னியெடுத்த மகிழ்-அனிருத் கம்போ.. விடாமுயற்சி டிரெய்லர் எப்படி இருக்கு?
Vidamuyarchi Trailer :விடாமுயற்சி படம் வெளியாகுமா ஆகாதா என்கிற குழப்பத்தில் அஜித் ரசிகர்கள் இருந்தார்கள். ஒருவழியாக விடாமுயற்சி படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம்.

அஜித் குமாரின் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட திரைப்படமான விடாமுயற்சியின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
டிரெய்லர் எப்படி இருக்கு?
மொத்தம் 2 நிமிடங்கள் 21 நொடிகள் ஓடும் இந்த டிரெய்லர் சாந்தமாக ஆரம்பித்து அதன் பிறகு ஜெட் வேகத்தில் செல்கிறது, டிரெய்லரின் ஆரம்பத்தில் காதல் காட்சிகளுடன் ஆரம்பித்து பின்னர் ஆக்சன் மோடில் செல்கிறது.
அசர்பைஜானின் நிலப்பரப்புகளை கேமராமேன் ஓம் பிரகாஷ் காட்சிபடுத்திய விதம் ஒரு ஹாலிவுட் எப்படி இருக்குமோ அந்த அளவிற்கான தரத்தில் இருந்தது, மேலும் டிரெய்லர் எடிட் செய்த விதமும் தரமாக இருந்தது, வெறும் பின்னணி இசையில் மட்டுமே டிரெய்லரை காட்டி இருக்கும் விதம் மகிழ் திருமேனியின் ”டச்” தெரிகிறது.
Persistence is the path, Victory is the destination. 💥 The VIDAAMUYARCHI Trailer is OUT NOW.
— Sun TV (@SunTV) January 16, 2025
🔗 Tamil - https://t.co/TQXaHHUXBv
FEB 6th 🗓️ in Cinemas Worldwide 📽️✨#Vidaamuyarchi #EffortsNeverFail #AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran @gkmtamilkumaran… pic.twitter.com/iNgXoWhaWe
இந்த டிரெய்லரில் முதுகெலும்பாக இருந்தது அனிருத்தின் பின்னணி இசை தான், ஒரு ஒரு காட்சி வித்தியாசமான இசையை கொடுத்து இருப்பது டிரெய்லரை இன்னும் மெருகெற்றி இருக்கிறது. அதிலும் இறுதியில் வரும் அந்த விடமுயற்சி என்கிற பிஜிஎம் அனிருத்கே உரிய தனித்தன்மையை காட்டுகிறது.
இதையும் படிங்க: Vidamuyarchi Trailer : அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி இதோ
இப்படத்தில் அஜித்தின் லுக் ஸ்டைலிஷாக உள்ளது, சண்டை காட்சிகளிலும் அஜித் புதிய உடல் மொழி சற்று வித்தியசமாக இருந்தது. மேலும் த்ரிஷா உடனான காதல் காட்சிகளிலும் அஜித் ரொமன்ஸ் சிறப்பாக இருக்கிறது.
விடாமுயற்சி படம் வெளியாகுமா ஆகாதா என்கிற குழப்பத்தில் அஜித் ரசிகர்கள் இருந்தார்கள். ஒருவழியாக விடாமுயற்சி படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது லைகா நிறுவனம்.
தாமதமான ரீலிஸ்:
விடாமுயற்சி திரைப்படம் இந்த பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் ஆங்கில படமான பிரேக் டவுன் படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது, இதனால் காப்புரிமை விவகாரத்தில் அந்த ஹாலிவுட் பட நிறுவனத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க தாமதமானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இதில் சுமுகமான முடிவு எடுக்கப்பட்டதை அடுத்து வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

