Vetrimaaran: பொல்லாதவன் படத்திற்கு முதலில் வைத்த தலைப்பு என்ன தெரியுமா? வெற்றிமாறன் பகிர்ந்த ரகசியம்
வெற்றிமாறன் தான் இயக்கிய பொல்லாதவன் படத்திற்கு முதலில் வைத்த பெயர் என்னவென்றும்? பொல்லாதவன் என்ற பெயர் வந்தது எப்படி? என்றும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.வைத்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான அவர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை, விடுதலை 2 ஆகிய படங்கள் மூலமாக தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்துள்ளார்.
பொல்லாதவன் படத்தின் உண்மையான தலைப்பு:
இவர் முதன்முதலில் இயக்கிய பொல்லாதவன் படத்திற்கு இவர் முதலில் வைத்த பெயர் இது இல்லை. மேலும், பொல்லாதவன் பெயர் எப்படி உருவானது? என்றும் அவர் ஒரு முறை தினேஷுடனான நேர்காணலில் பேசியிருப்பார். அப்போது, வெற்றிமாறன் கூறியிருப்பதாவது,
பர்ஸ்ட் படத்தோட தலைப்பு ஆக்சிடன்டா அமைஞ்சது. நான் வந்து ஒரு நல்ல தலைப்பு வச்சுருந்தேன். பாலகுமாரனோட ஒரு நாவல் தலைப்பு இரும்பு குதிரைனு வச்சுருந்தேன். எனக்கு உண்மையிலே அது பிடிச்சுருந்தது. ஆனால் தயாரிப்பாளர் தரப்புல அது நல்லா இல்லைனு சொன்னாங்க. தலைப்பை ரிப்பீட் பண்ற பழக்கம் ஸ்டார்ட் ஆகியிருந்தது.
பொல்லாதவன் வந்தது எப்படி?
அதுக்கு அப்புறம் அவங்க தம்பிக்கு எந்த ஊருனு தலைப்பு வைக்கலாம்னு சொன்னாங்க. நான் கோவத்துல சொன்னேன் அதுக்கு பொல்லாதவன்னு பெயர் வச்சுடலாம்னு சொன்னேன். அப்படியே எல்லாம் சைலன்ஸ். சூப்பரா இருக்கும் அத வச்சிடலாம். நான் அய்யய்யோ மாட்டிக்கிட்டேனடானு நினைச்சேன்.
அப்புறம் நான் வந்து அப்படிலாம் வைக்க முடியாது சார். தனுஷை கேட்டுத்தான் பண்ணனும். தனுஷை கேக்காம எல்லாம் பண்ண முடியாது. அதுனால, தனுஷ் எனக்கு ஆதரவா பேசுவாருங்குற நம்பிக்கையில கால் பண்ணேன். நான் அவருக்கு விளக்கமா சொல்லிட்டு பொல்லாதவன்னு அதை வச்சுக்கலாம்ங்குறனு சொன்னேன். அவரு எனக்கு தலைப்பு ரொம்ப பிடிச்சுருக்குனு சொல்லிட்டாரு.
இவ்வாறு அவர் கூறினார்.
மிகப்பெரிய வெற்றி:
தனுஷ், ரம்யா நம்பீசன், டேனியல் பாலாஜி, கிஷோர், பானுப்பரியா, சந்தானம், கருணாஸ், பவன் ஆகியோர் நடித்திருப்பார்கள். கதாநாயகனின் இரு சக்கர வாகனம் காணாமல் போவதும், அதை எப்படி கதாநாயகன் கண்டுபிடிக்கிறான் என்பதுமே படத்தின் கதைக்களம் ஆகும். இந்த படத்தை குரூப் கம்பெனி தயாரித்திருக்கும். பைவ் ஸ்டார் ப்லிம்ஸ் விநியோகிஸ்திருந்தது.
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருப்பார். படிச்சு பாத்தேன் பாடலுக்கு தீனாவும், எங்கேயும் எப்போதும் பாடலுக்கு யோகி பி-யும் இசையமைத்திருப்பார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு வெற்றி மாறன் தனுஷை வைத்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கினார்.





















