மேலும் அறிய

VetriMaaran: ஜூனியர் என்.டி.ஆருடன் இணைகிறேனா? - இயக்குநர் வெற்றிமாறன் சொன்ன பதில்.. ரசிகர்கள் அதிர்ச்சி

ஜூனியர் என்.டி.ஆருடன் இணையப் போகிறார் என கடந்த சில மாதங்களாக வதந்தி பரவிய  நிலையில் அதுகுறித்து இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார். 

ஜூனியர் என்.டி.ஆருடன் இணையப் போகிறார் என கடந்த சில மாதங்களாக வதந்தி பரவிய  நிலையில் அதுகுறித்து இயக்குநர் வெற்றிமாறன் பதிலளித்துள்ளார். 

எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு  தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் “விடுதலை” என்ற படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் கதையின் நாயகனாக சூரியும், வாத்தியாராக போராளி கேரக்டரில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். 

மேலும்  பவானி ஸ்ரீ, சேத்தன்,  கௌதம்மேனன், ராஜீவ்மேனன் உள்ளிட்டோரும் படத்தில் இடம் பெற்றிருந்தனர். ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்த விடுதலை படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. 2 ஆம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

இதனிடையே விடுதலை படத்தின்  தெலுங்கு டப்பிங் வரும் ஏப்ரல் 15 ஆம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு நடிகர் சூரி, இயக்குநர் வெற்றிமாறன், நடிகை பவானி ஸ்ரீ ஆகியோர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக ஹைதராபாத் சென்றுள்ளனர். அந்த வகையில் அல்லு அர்ஜுனின் தந்தையான தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், தனது தயாரிப்பு நிறுவனமான கீதா ஆர்ட்ஸின் கீழ் இப்படத்தை தெலுங்கில் வெளியிடுகிறார். இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடந்தது. 

அப்போது இயக்குநர் வெற்றிமாறனிடம் தெலுங்கு நடிகர்களுடன் பணிபுரிவது தொடர்பான பரவும் தகவல் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, “ஆடுகளம் படத்தின் ரிலீசுக்குப் பிறகு அல்லு அர்ஜுனை சந்தித்தேன், அவரும் சென்னையில் என்னை சந்தித்தார். அப்போது அல்லு அர்ஜூன் என்னிடம், நான் தமிழில் நடிக்க விரும்புகிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் எனக்கு கதை சொல்லுங்கள் என சொன்னார் அந்த நேரத்தில் நான் வட சென்னை படத்தின் கதையை சொன்னேன். அதில் ஒரு சக்தி வாய்ந்த கேரக்டர் இருந்தது. அதை நான் இப்போது மீண்டும் மாற்றி எழுதியுள்ளேன். படத்தின் தற்போதைய வடிவம் அந்த நேரத்தில் என் மனதில் இருந்தது போல இல்லை. இன்னொரு கேரக்டர் இருக்கு. அதை சொன்னேன். அது நடக்கவில்லை.

அதேபோல் “ஆடுகளம் வெளியீட்டிற்குப் பிறகு மகேஷ் பாபுவையும், அசுரன் படத்திற்கு பிறகு  ஜூனியர் என்டிஆரையும் சந்தித்து பேசினேன். ஆனால் இவர்களை இயக்க சில காலம் தேவைப்படும் என்பதால் இப்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது” என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இதில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணையும் படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும், முதல் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாம் பாகத்தில் தனுஷும் நடிக்கவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 
  

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது
*விஜய் ஆண்டனியின் நூறு சாமி படத்தின் ஓடிடி தேதி அறிவிப்பு வெளியானது

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
Embed widget