நடிகர் ராஜேஷுக்கு என்ன ஆச்சு? உயிரையே பறித்த அந்த பிரச்சனை - வெளியான ஷாக்கிங் தகவல்!
பழம்பெரும் நடிகர் ராஜேஷின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதற்கான காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில், பல்வேறு திறமைகளுடன் வலம் வந்தவர் நடிகர் ராஜேஷ். 75 வதாகவும் இவர்... சமீப காலமாக திரைப்படங்களை தாண்டி சீரியல், நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்த நிலையில், இன்று காலை இவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவருடைய மரணத்திற்கு என்ன காரணம் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடியில் 1949- ஆம் ஆண்டு பிறந்தவர் தான் ராஜேஷ். கிருஸ்தவ குடும்பத்தில் பிறந்த இவரது உண்மையான பெயர் வில்லியம்ஸ். தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்ததும்... பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவருக்கு, 1974-ல் இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின்னர் சினிமாவுக்காக தன்னுடைய பெயரையும் ராஜேஷ் என மாற்றி கொண்டார்.

இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் பாலகுரு இயக்கத்தில் வெளியான 'கன்னி பருவத்திலே' படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். பின்னர் தாய் மனம், தை பொங்கல், நான் நானேதான், அந்த 7 நாட்கள், உட்பட பல படங்களில் நடித்தார். இவர் ஹீரோவாக நடித்த படங்கள் மிகவும் குறைவு என்றாலும், 400-கும் மேற்பட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ளார் ராஜேஷ். அதே போல் சில படங்களுக்கு டப்பிங் செய்துள்ள ராஜேஷ்... ஏராளமான சீரியல்களிலும் நடித்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு நிறைவடைந்த 'கார்த்திகை தீபம்' சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் ஹீரோயினின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்தார்.
51 வருடங்களாக சினிமாவில், தன்னுடைய ஈடு இணையில்லாத நடிப்பால் ரசிகர்களை மகிழ்வித்து வந்த ராஜேஷ், இன்று காலை மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியானது. ஆனால் இவரது மரணத்திற்கு வேற ஒரு முக்கிய காரணமும் உள்ளது. அதாவது இன்று காலையிலேயே ராஜேஷுக்கு திடீர் என ரத்த அழுத்தம் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே ராஜேஷ் நிலைகுலைந்து மயங்கி கீழே விழுந்துள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னதாகவே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.





















