மேலும் அறிய

Chef Venkatesh Bhat: பொங்கலில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? மனம் திறக்கும் செஃப் வெங்கடேஷ் பட்!

Chef Venkatesh Bhat: காலை உணவின் முக்கியத்துவம் பற்றி செஃப் வெங்கடேஷ் பட் ...

செஃப் வெங்கடேஷ் பட்- இவரை தெரியாதவர் இருக்க முடியாது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான இவரின் சமையல் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்து, விஜய்-டிவியின் பிரபல ஷோ குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர். இவரது இதயம் தொட்ட சமையல் யூடியூப் சேனலும் மிகவும் பிரலமானதுதான். பாரம்பரிய உணவுகள், மேற்கத்திய நாடுகளின் உணவு வகைகள், சாட் உணவுகள் என எதுவாக இருந்தாலும் இவர் தனக்கென தனிபாணியில் ஒரு ரெசிபை பின்பற்றுவார். வெங்கடேஷ் சமையல் செய்யும் விடீயோவைப் பார்த்தாலே நமக்கும் சமைக்கனும்னு தோணும் அளவிற்கு அவர் சமையல் கலையில் வித்தகர். விடீயோக்களில் அவர் பேசிக்கொண்டு சமைப்பதைப் பார்த்து ரசிக்க தனி ரசிகர்கள் இருக்கிறார்கள் எனலாம். 

காலை உணவு ஒரு மனிதனுக்கு அவ்வளவு முக்கியம். காலை உணவிப் முக்கியத்துவம் பற்றியும் என்னெல்லாம் ஃபாலோ பண்ணனும் என்பது பற்றியும் செஃப் வெங்கடேஷ் பட் ஒரு நேர்காணலில் பகிர்ந்து கொண்டது பற்றி இத்தொகுப்பில் காணலாம். 

நம்முடைய உணவு முறை, வாழ்க்கை சூழல் ரொம்பவே மாறிவிட்டது. அதற்கேற்றவாறு நாம் ஆரோக்கியமான உணவு முறையை தேர்ந்தெடுக்க வேண்டும். பொங்கல்- ஒரு நல்ல காலை உணவுதான். அரிசியில் இருக்கும் கார்போஹைட்ரேட், பாசி பருப்பில் இருக்கும் புரோட்டீன், நெய்யில் உள்ள கொழுப்பு என எல்லாம் ஒரு ஊட்டச்சத்து காம்போதான். ஆனால், இதையே தினமும் சாப்பிட்டு வந்தா என்னாகும் தெரியுமா? ஒரு 40 நாட்கள் இதை காலை உணவாக எடுத்துக்கொண்டால் அவ்வளவுதான். 5 கிலோ எடை அதிகரிக்கும். 

தென்னிந்திய உணவுமுறையில் இட்லி ரொம்பவே பிரபலம். உலக அளவில் பிரபலம். ஆனாலும் அதன் ஆரோக்கியம் அதை நாம் சாப்பிடும் முறையிலே இருக்கிறது. இட்லி ஆவியில் வேகவைத்த உணவு என்பதால் உடலுக்கு எவ்வித கெடுதலையும் உண்டாக்காது. ஆனால், இரண்டு இட்லிக்கு ஒரு கப் சாம்பாருக்கு பதிலாக, ஆறு கப் சாம்பார் சாப்பிட்டோமானால் அவ்வளவுதான். நெஞ்செரிச்சல் உள்ளிட்ட வயிறு கோளாறுகள் ஏற்படும்.

Chef Venkatesh Bhat: பொங்கலில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? மனம் திறக்கும் செஃப் வெங்கடேஷ் பட்!

உலகில் நம் நாட்டைப் போலவே மற்ற நாடுகளிலும் ஹெல்தி காலை உணவு இருக்கும். சீனாவின் காலை உணவும் சிறப்பானதுதான். காலை உணவாக அவங்க வேகவைத்த மீன் சாப்பிடுவாங்க. அதில் அதிக அளவு புரோட்டீன் இருக்கும். 

மேற்கத்திய நாடுகளில், காலை உணவாக ஒரு கப் பழங்கள், ஜூஸ் அப்பறம் பிளாக் காஃபி. இவ்வளவுதான். இதுவும் ரொம்பவே ஆரோக்கியமான உணவுதான். ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. ஆனால் அதை நாம் எந்த அளவுக்கு எப்படி உண்ணுகிறோம் என்பதிலும் அடங்கியிருக்கிறது. அளவோடு சாப்பிட்டால் எந்த உடலுக்கு எந்த தொல்லையும் இல்லை. 

View this post on Instagram
 
A post shared by venkatesh bhat (@chefvenkateshbhat)

இன்றைய அவசர உலகில் பிளாஸ்டிக் கப்பில் இட்லி தயாரிக்கப்படுகிறது, பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து விட்டது! உணவு தயாரிப்பு துறையில் இந்த பிளாஸ்டி பயன்பாடு குறித்து என்ன நினைக்கிறீங்கன்னு கேட்ட கேள்விக்கு, வெங்கடேஷ் பட் “ இது தவறான நடைமுறை. நாம் உணவு வழங்க வாழை இலை, மந்தாரை இலைகளை மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கிறோம். அதனால் உடலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. ஆனால், இன்றைய காலத்தில் பிளாஸ்டிக் கவரில் அடைத்துதான் உணவு டெலிவரி செய்யப்படுகிறது. சூடான உணவை பிளாஸ்டிக் கவரில் போட்டு, அரை மணி நேரம் கழித்து அது சாப்பிடுபவர்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. அதை மீண்டும் சூடு செய்து சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள்.அதுவும் தவறுதான். 60 டிகிரி வெப்பத்திற்கு மேல் இருக்கும் உணவை பிளாஸ்டிக் கவரில் வைப்பது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. என்கிறார். 

தலைப்பு செய்திகள்

அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அன்று குழந்தை நட்சத்திரம் , இன்று கேமியோ..40 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி ஹ்ரித்திக் ரோஷன் கூட்டணி
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
அனைவரையும் குஷிபடுத்திய நெல்சன்! ஜெயிலர் 2 பார்த்து பிரபலங்கள் சொல்வது என்ன?
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
ஜெயிலர் 2 பார்த்து விமர்சனம் சொன்ன தனுஷ்!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!
Jailer 2 Review: குடும்பத்தோடு கொண்டாடுங்க.. மிரட்டிய ரஜினிகாந்த் - நெல்சன் காம்போ.. ஜெயிலர் 2 விமர்சனம் இதோ!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Thirumavalavan: ”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
”தொகுதி மாறி நிற்க சொன்னேன், ஸ்டாலின் என் பேச்சை கேட்கவே இல்லை” SIR சதி - திருமாவளவன் அதிரடி
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Embed widget