மேலும் அறிய

Boat Movie : இது மனித நேயத்தையும் கடந்த படம்...போட் படத்தை பாராட்டிய திருமாவளவன்

சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள போட் படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பாராட்டியுள்ளார்

போட் 

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள படம் போட் . இப்படத்தில் கெளரி கிஷன் , என்.எஸ் பாஸ்கர் , சின்னி ஜெயந்த்  உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. 

போட் படத்தின் கதைக்களம்

ஒருபுறம் இரண்டாம் உலகப்போர், மறுபுறம் சுதந்திர போராட்டம் நடக்கும் 1943ம் ஆண்டே கதைக்களம் ஆகும். ஹிட்லரின் ஆதரவு நாடாக இருந்த ஜப்பான் குண்டு மழை பொழிந்து மற்றவர்களை அச்சுறுத்தி வந்த சூழலில், சென்னையில் கடற்கரையோரம் உள்ள வெள்ளையர்களின் முகாமின் தீடீரென குண்டு வீசப்போகிறார்கள் என்ற தகவல் பரவுகிறது. இதையடுத்து, மக்கள் பதற்றத்தில் தப்பியோடுகின்றனர்.

அந்த முகாமில் கைதியாக உள்ள தனது தம்பியை விடுவித்து அழைத்துச் செல்லும் மீனவர் குமரனும், அவனது பாட்டியும் உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர்களது படகில் கடலுக்குள் தப்பிச் செல்கின்றனர். இவர்கள் தவரித்து இந்த படகில் இன்னும் ஆறு பேர் ஏறிக்கொள்ள இவர்களுக்கு இடையிலான உரையாடல்களின் வழி படத்தை சுவாரஸ்யப் படுத்தியிருக்கிறார் இயக்குநர் சிம்பிதேவன். படத்தில் உள்ள அரசியல் வசனங்களை இயக்குநர் சிம்புதேவன் சிறப்பாக கையாண்டுள்ளதாக பலர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் போட் படத்தைப் பாராட்டி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். 

இது மனித நேயத்தை கடந்த படம்

” இயக்குநர் சிம்புதேவன் இயக்கிய போட் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பூர்வீக குடிகள் தங்கள் மண்ணில் இருந்து அப்புறப்படுத்தப்படுவதை மையமாக வைத்து இப்படத்தை தனக்கே உரிய பாணியில் திறம்பட இயக்கியுள்ளார். ஐயர் வீட்டுப் பெண் , மீனவ சமூகத்தைச் சார்ந்த இளைஞன்  இவர்களுக்கு இடையில் மென்மையான ஒரு உணர்வு இருக்கிறது. திராவிடம் மற்றும் ஆரியம் ஆகிய இரு தரப்பினருக்கு இடையிலான மோதல் குறித்தும் இந்த படம் விவாதிக்கிறது.

பல்வேறு சமூக இருப்புகள் குறித்து அவற்றுக்கு இடையிலான முரண்கள் பேசியிருக்கிறார் இயக்குநர். இப்படம் மனித நேயத்தையும் கடந்து பூர்வீக குடிகளின் வழிகளை பேசும் படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் சிம்புதேவனுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?Trichy VarunKumar SP | ’’I AM WAITING’’வருண் IPS அடுத்த சம்பவம்..கதிகலங்கும் ரவுடிகள்Woman Body Found in Suitcase | பாலியல் தரகர்களுடன் தொடர்பு?துண்டு துண்டான இளம்பெண்!Jani Master Arrest | பாலியல் வன்கொடுமை தலைமறைவான ஜானி மாஸ்டர் ! தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget