Vasanth Ravi: வசந்த் ரவி நடிப்பில் உருவாகும் அடுத்த படம் இந்திரா.. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார்.
![Vasanth Ravi: வசந்த் ரவி நடிப்பில் உருவாகும் அடுத்த படம் இந்திரா.. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்! vasanth ravi starrer movie indra first look released details Vasanth Ravi: வசந்த் ரவி நடிப்பில் உருவாகும் அடுத்த படம் இந்திரா.. ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/15/1b3061050419d53b7644c123f50b9c151702653288117574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் இயக்கத்தில் வசந்த் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்திற்கு இந்திரா எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஜெ.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில் ஏ.ஆர்.ஜாபர் சாதிக் மற்றும் எம்பரர் என்டர்டெயின்மென்ட் சார்பில் இர்ஃபான் மாலிக் இணைந்து தயாரித்து வசந்த ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "இந்திரா"
நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது இயக்குனராக அறிமுகமாகிறார். வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார்.
மேலும் இவர்களுடன் அனிகா சுரேந்திரன், சுனில், கல்யாண் மாஸ்டர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். தற்போது இப்படத்திற்கு இந்திரா என தலைப்பு வைக்கப்பட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மான்ஸ்டர் எனக் குறிப்பிடப்பட்டு இரு வேறு தோற்றங்களில் இந்த போஸ்டரில் வசந்த் ரவி தோன்றும் நிலையில், போஸ்டர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
Thank you @arya_offl brother 🤍 https://t.co/1xuw9zvIf7
— Vasanth Ravi (@iamvasanthravi) December 15, 2023
முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தில் நடித்த வசந்த் ரவி தனது நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றார். ரஜினியின் பையன் மற்றும் வில்லனாக நடித்து பிரபலமான வசந்த் ரவி தரமணி படத்தின் மூலம் ஹீரோவாக 2017ஆம் ஆண்டு அறிமுகமானார்.
தொடர்ந்து 2021ஆம் ஆண்டு வெளியான ராக்கி மற்றும் அஸ்வின்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ள வசந்த் ரவி, ஜெயிலர் படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களின் மத்தியிலும் பிரபலமாகியுள்ளார்.
நடிப்பு தாண்டி பிஸ்னஸிலும் இவர் கலக்கி வருகிறார். சென்னையில் உள்ள பிரபல உணவகமான நம்ம வீடு வசந்த பவன் என்ற உணவகம் வசந்த் ரவிக்கு சொந்தமானதாம். இவரது திருமணத்தில் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த முன்னதாக கலந்து கொண்ட புகைப்படமும் சமீபத்தில் இணையத்தில் டிரெண்டாகியது.
அடுத்ததாக நடிகர் சத்யராஜ் உடன் வசந்த் ரவி நடித்து முடித்துள்ள வெப்பன் திரைப்படமும் வெளியாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)