மேலும் அறிய

Varun Dhawan: வெஸ்டிப்யூலர் ஹைபோஃபங்க்ஷன் நோயால் பாதிக்கப்பட்ட வருண்.. இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி பதிவு.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!

வெஸ்டிபுலர் ஹைபோஃபங்க்ஷன் ( Vestibular Hypofunction) தோற்றால் பாதிக்கப்பட்டு இருந்த வருண் தவான் தனது உடல் நிலை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

வெஸ்டிப்யூலர் ஹைபோஃபங்க்ஷன் ( Vestibular Hypofunction) தோற்றால் பாதிக்கப்பட்டு இருந்த வருண் தவான் தனது உடல் நிலை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

பாலிவுட்டில் முன்னணி நடிகரான வருண் தவான் சமீபத்தில் வெஸ்டிப்யூலர் ஹைபோஃபங்க்ஷன் எனும் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். அவர் அனுபவித்த தொற்று பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். தற்போது தனது 'பேடியா' படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப்படத்தின் மூலமாக, தில்வாலே படத்திற்கு பிறகு வருண் தவான் மீண்டும் க்ரித்தி சனோனுடன் இணைந்திருக்கிறார். 

 

Varun Dhawan: வெஸ்டிப்யூலர் ஹைபோஃபங்க்ஷன் நோயால் பாதிக்கப்பட்ட வருண்.. இன்ஸ்டாவில் நெகிழ்ச்சி பதிவு.. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!

மனம் திறந்து பேசிய வருண் தவான் :

கொரோனா தொற்று நோய் காலத்திற்கு பிறகு வரம்புக்கு மீறி, தனது முழு ஈடுபாட்டையும் ராஜ் மேத்தாவின் "ஜக்ஜக் ஜீயோ" படத்தின் படப்பிடிப்பில் வெளிப்படுத்தியதால் தனது உடல் நிலை மிகவும் ஒரு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது என வருண் கூறியிருக்கிறார். 

மேலும் அவர் கூறுகையில் "அந்த சமயத்தில் எனக்கு என்ன நேர்ந்தது என எனக்கு தெரியவில்லை. நான் வெஸ்டிப்யூலர் ஹைபோஃபங்க்ஷன் தோற்றால் பாதிக்கப்பட்டேன். ஒரு பாதிப்பு ஏற்படும் போது அது நமது பேலன்ஸை குறைக்கிறது. அதனால் நான் முன்பை விடவும் மிகவும் கடினமாக என்னை முன்னிறுத்த முயற்சித்தேன்.

வாழ்கை எனும் பந்தயத்தில் நான் ஓடுவதை பற்றி யாரும் கேட்க போவதில்லை. இருப்பினும் இதற்கு ஒரு காரணம் இருப்பதாக நான் உணர்கிறேன். அது என்ன என்பதை கண்டுபிடிக்க நான் முயற்சிக்கிறேன். மக்கள் அவர்களுடைய நோக்கம் என்ன என்பதை கண்டுபிடிப்பார்கள் என நம்புகிறேன்" என கூறினார் வருண் தவான்.  

  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by VarunDhawan (@varundvn)

 

வெஸ்டிப்யூலர் ஹைபோஃபங்க்ஷன் என்றால் என்ன ?

வெஸ்டிப்யூலர் ஹைபோஃபங்க்ஷன் என்பது காதுகளுக்கும் மூளைக்கும் இடையில் உள்ள இணைப்பு. இது தான் நீங்கள் படுக்கையில் இருந்து எழும் போதும் அல்லது கடினமான தரையில் நடக்கும் போது உங்களை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இது தான் வெஸ்டிபுலர் என அழைக்கப்படுகிறது. ஏதாவது ஒரு நோய் அல்லது காயம் அந்த மண்டலத்தில் ஏற்பட்டு சேதப்படுத்தினால் வெஸ்டிபுலர் கோளாறு ஏற்படலாம். இதனால் தலைசுற்றல், பேலன்ஸ் செய்வதில் சிக்கல் போன்றவை ஏற்படலாம். இது தானே வெஸ்டிபுலர் கோளாறின் பொதுவான அறிகுறி. இதனால் உங்களின் கேட்கும் திறன் மற்றும் பார்வை கோளாறு ஏற்படலாம்.  

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kriti (@kritisanon)

 

நவம்பர் 25 ரிலீஸாகும் பேடியா :

தற்போது வருண் தவான் நடித்து வரும் ஹாரர் - காமெடி திரைப்படமான "பேடியா" திரைப்படத்தை இயக்கியுள்ளார் அமர் கௌஷிக். சமீபத்தில் தான் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மிகவும் மும்மரமாக புரொமோஷன் பணிகள் நடைபெற்று வரும் இப்படம் நவம்பர் 25 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் நித்தேஷ் திவாரி இயக்கத்தில் "பவால்" எனும் படத்திலும் நடித்து வருகிறார் வருண் தவான். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

தலைப்பு செய்திகள்

பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
ஜெய் பீம் பார்த்து இயக்குநரை திட்டிய அம்மா...மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்ய நிகழ்வு

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
Embed widget