Varisu Telugu: தள்ளிப்போகும் தெலுங்கு வாரிசு.... சிரஞ்சீவி, பாலகிருஷ்ணாதான் காரணமா?
வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு’ படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

தெலுங்கில் டாப் ஹீரோக்களின் படங்களுடன் போட்டிபோடும் வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் தயாராகியுள்ள விஜய்யின் வாரிசு படம் நாளை மறுநாள் ஜனவரி 11ஆம் ரிலீசாக உள்ளது. எனிமும் வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான வாரசுடு படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.
கோலிவுட் பொங்கல் வெளியீட்டுக்கு இணையாக டோலிவுட்டிலும் ஆண்டு தோறும் சங்கராந்தி ஸ்பெஷல் படங்கள் ரிலீசாகும் நிலையில், வாரசுடு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருப்பதாக முன்னதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த ஆண்டு டோலிவுட்டின் மெகா ஸ்டாராக வலம் வரும் நடிகர் சிரஞ்சீவியின் படமும், தெலுங்கு சினிமா உச்ச நட்சத்திரமும் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா படமும் இந்த சங்கராந்தி பண்டிகைக்கு நேரடியாக மோதவுள்ளன.
டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் முன்னணி நடிகர் ரவி தேஜா இணைந்து நடித்துள்ள ‘வால்டர் வீரய்யா’ படம் ஜனவரி 13ஆம் தேதியும், பாலகிருஷ்ணாவின் வீர சிம்மா ரெட்டி படம் ஜனவரி 12ஆம் தேதியும் ரிலீசாக உள்ள நிலையில் கோலிவுட்டைப் போல் டோலிவுட் வட்டாரமும் களைகட்டியுள்ளது.
இச்சூழலில் விஜய்யின் வாரிசு படம் வாரசுடு எனும் பெயரிலும் அதேபோல் ‘துணிவு’ படம் தெகிம்பு எனும் பெயரிலும் தெலுங்கில் ரிலீசாக உள்ளது.
View this post on Instagram
இந்நிலையில், வாரசுடு படம் வரும் ஜனவரி 14ஆம் தேதி ரிலீசாவதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. துணிவு படத்தின் தெலுங்கு பதிப்பான தெகிம்பு ஜனவரி 11ஆம் தேதியே தெலுங்கில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

