Varisu : நான் வர்றேன் தனியா.. வாரிசு கட் அவுட் ரெடி.. ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள் - வைரல் வீடியோ!
இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று தெரிந்துவிட்டது. ஆனால் எந்த நாளில் வெளியாகும் என்பதுதான் விளங்கவில்லை.
வாரிசு படத்தின் விநியோகஸ்தரான செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ், அப்படத்திற்கான கட்-அவுட் தயாரிக்கும் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
இந்த பொங்கல் பண்டிகைக்கு, துணிவு படத்தின் ரிலீஸ் உறுதியான நிலையில், அந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் வெகு விமர்சையாக நடந்து வந்தது. படக்குழுவினரை விட, ஊரில் உள்ள திரையரங்கின் உரிமையாளர்கள் அனைவரும் துணிவு பட போஸ்டரை சுவற்றுக்கு சுவறு ஒட்டி வைத்து அஜித் ரசிகர்களை திருப்தி அடைய செய்துள்ளனர்.
இப்படியாக இணையத்தில் காலரை தூக்கிவிட்டு சுற்றி வந்த அஜித் ரசிகர்களை பார்த்து, விஜய் ரசிகர்கள் ஏங்க ஆரம்பித்தனர். வருத்தத்தில் இருந்த விஜய் ரசிகர்களை, சந்தோஷப்படுத்தியது நேற்று நள்ளிரவில் வெளியான வாரிசு படத்தின் போஸ்டர். வாரிசு பொங்கல் பண்டிகையையொட்டி
வெளியாகும் என்ற செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் இந்த போஸ்டர் அமைந்தது.
It’s just the beginning 🔥#VarisuHoardings
— Seven Screen Studio (@7screenstudio) November 30, 2022
The Boss Returns 🔥#Varisu in theatres near you from Pongal 2023 😊#Thalapathy @actorvijay @SVC_official @directorvamshi@iamRashmika @MusicThaman@Jagadishbliss #VarisuPongal 🔥 pic.twitter.com/tCbVluW3Aq
தற்போது, இப்படத்தின் வாரிசு படத்தின் விநியோகஸ்தரான செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ், அப்படத்திற்கான கட்-அவுட்டை தயாரித்து, அதை தியேட்டர் வாசல்களில் ஒட்டும் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். தற்போது, இப்படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று தெரிந்துவிட்டது. ஆனால் எந்த நாளில் வெளியாகும் என விளங்கவில்லை. பலரும், இப்படம் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர்.
View this post on Instagram
வாரிசு படம் சந்தித்த சிக்கல் :
வாரிசு படத்தின் தெலுங்கு வெளியீட்டில், ஏற்பட்ட பிரச்சினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் முடித்து வைக்கப்பட்டது. இதேபோல் வாரிசு படப்பிடிப்பில், உரிய அனுமதியின்றி யானைகளை பயன்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில் அது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க, விலங்குகள் நல வாரியம் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.