Varisu Audio Launch: ஏமாற்றிய வாரிசு படக்குழு.. சோகத்தில் விஜய் ரசிகர்கள்.. ஆடியோ வெளியீட்டு விழாவில் நடக்கப்போகும் ட்விஸ்ட்..!
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படாது என வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆண்டுகளுக்குப் பின் விஜய் - அஜித்தின் படங்கள் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் சினிமா ரசிகர்கள் இப்போதே மோதலுக்கு தயாராகி விட்டார்கள்; அஜித்திற்கு துணிவு படம் வெளியாகவுள்ள நிலையில், விஜய்க்கு வாரிசு படம் வெளியாகவுள்ளது. இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார்.
மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ வாரிசு தயாரித்த நிலையில் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி, ஆராரிராரோ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வரும் டிசம்பர் 24 ஆம் தேதி ஆடியோ வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.
View this post on Instagram
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் விழாவில் இவ்விழாவுக்கான அனுமதி பாஸ்கள் நேற்று அனைத்து மாவட்ட விஜய் தலைமை மன்ற நிர்வாகிகளிடம் வழங்கப்பட்ட நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவில் பல சுவாரஸ்மான சம்பவங்களை நிகழ்த்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக செல்லும் நிலையில் புகைப்படங்களும் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும் 2 ஆண்டுகளுக்குப் பின் விஜய் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கப்போவதால் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் விதமாக இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நேரலை செய்யப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படாத நிலையில், வாரிசு ஆடியோ நிகழ்ச்சியை பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜூ தொகுத்து வழங்குகிறார்; மேலும் இந்நிகழ்ச்சி புத்தாண்டு சிறப்பாக வரும் ஜனவரி 1 ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது.