Varalaxmi Sarathkumar : நாய் தாய்க்கு தான் தெரியும்... ’ வைரலாகும் வரலட்சுமியின் ரீல்ஸ் வீடியோ!
வரலட்சுமி சரத்குமார் தன் நாய் குட்டி கூஷியுடன் ரீல்ஸ் வீடியோவை ஒன்றை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் அந்த ரீல்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபல நடிகர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் தான் வரலக்ஷ்மி என்பது அனைவரும் அறிந்ததே. சென்னையில் தனது பள்ளி மற்றும் கல்லுரி படிப்பை முடித்த வரலக்ஷ்மி ஒரு மைக்ரோபயாலஜி மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையை போல நடிப்பில் ஆர்வம் கொண்ட வரலக்ஷ்மி மும்பையில் உள்ள அனுபம் க்ஹெர் என்ற நடிப்பு பயிற்சி பள்ளியில் முறையாக நடிப்பு பயிற்சி பெற்றார். அதன் பிறகு நடிக்க ஆர்வத்துடன் இருந்த வரலட்சுமிக்கு தொடக்கத்திலேயே பல வாய்ப்புகள் வரத்தொடங்கியது.
View this post on Instagram
ஷங்கரின் பாய்ஸ், காதல் உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்த நிலையில் சில காரணங்களால் அவரால் அந்த படங்களில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு 2012ம் ஆண்டு பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரபல நடிகர் சிம்பு நடிப்பில் உருவான போடா போடி என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கினர். போடா போடி விக்னேஷ் சிவனின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வரும் வரலக்ஷ்மி தனது துணிவான பேச்சு மற்றும் தனித்துவமான நடிப்பிற்காக பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றார். நடிகை வரலக்ஷ்மி தற்போது கன்னடத்தில் லகாம் என்ற படத்திலும் 5 தமிழ் படங்களிலும் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிப்பு என்பது ஒருபுறம் இருக்க பல சமூக பணியிலும் வரலக்ஷ்மி பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றார். Save Sakthi என்ற நிறுவனம் மூலம் பல நல்ல காரியங்களை செய்து வருகின்றார்.
View this post on Instagram
இந்த நிலையில் வரலட்சுமி சரத்குமார் நாய்க்குட்டிகள் மீது தீராத அன்பு கொண்டவர் அந்த வகையில் அவர் ஒரு கூஷி என்ற நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த நாய்க்குட்டிக்கு தனியாக ஒரு இன்ஸ்டாகிராம் பக்கம் உள்ளது அந்த பக்கத்திற்கு 22 ஆயிரம் பாலோவர்ஸ் உள்ளனர். தற்போது அந்த பக்கத்தில் நாய்க்குட்டியோடு விளையாடும் ஒரு வீடியோவை பதிவிட்டு மற்றும் அதில் கேப்ஷனாக "ஒவ்வொரு நாய் வளர்க்கும் அம்மாவிற்கு தான் தெரியும் அது எப்படிபட்ட உணர்வு என்று" என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த ரிலீஸ் வீடியோ ஆனது தற்போது வைரலாகி வருகிறது.