Vanitha Vijaykumar: ‛கடவுள் ஆசியுடன் இதை அறிவிக்கிறேன்...’ மகிழ்வோடு பகிர்ந்த வனிதா விஜயகுமார்!
சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆண்கள் பெண்களுக்கான பிரத்தியேக உடைகள், அலங்காரப் பொருட்கள் விற்பனையகம் ஒன்றை வனிதா விஜயகுமார் தொடங்கினார்.
மூத்த நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதா விஜயகுமார். கணவர்களுடன் கருத்துவேறுபாடு, தந்தையிடம் கருத்துவேறுபாடு, சகோதரிகளிடம் கருத்து வேறுபாடு என பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் தனிமையில் வசித்து வருகிறார்.
மாணிக்கம், சந்திரலேகா போன்ற படங்களில் நடித்த வனிதா விஜயக்குமார், அதன் பின் அவரது சுய வாழ்வில் ஏற்பட்ட பிரச்னைகளால் பின்னர் அறியப்பட்டார். அதன் பின், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த வனிதா, தனது தைரியமான பேச்சாலும், அடக்கி ஆளும் முறையாலும் பலரால் பாராட்டப்பட்டார்; சிலரால் விமர்சிக்கப்பட்டார். ஆனாலும், தன் நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருக்கும் அவர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் விஜய் டிவியில் வரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தலை காட்டி வந்தார்.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், தனிப்பெண்ணாக சுயமாக சில தொழில்களை தொடங்கினார். அதன் படி, ஆடையகம், அலங்கார பொருட்கள் விற்பனையகம் என தன் தொழிலை விரிவுபடுத்தினார் வனிதா. இதற்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிக்கு மணி அப்டேட் போடுவதும் அவரது வழக்கம்.
View this post on Instagram
கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆண்கள் பெண்களுக்கான பிரத்தியேக உடைகள், அலங்காரப் பொருட்கள் விற்பனையகம் ஒன்றை வனிதா விஜயகுமார் தொடங்கினார். வனிதா விஜயகுமார் ஸ்டைலிங் ஸ்டுடியோ என்ற இந்த விற்பனை நிலையத்தின் ஓராண்டு நிறைவு விழாவை இன்று கொண்டாடுகிறார் வனிதா.இந்த கொண்டாட்டம் குறித்து வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
அதில், கடவுள் அருளுடனும் நலம் விரும்பிகளின் ஆசிர்வாதங்களுடன் வனிதா விஜயகுமார் ஸ்டைலிங் ஸ்டுடியோவின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இது கொண்டாட்டத்திற்கான நேரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவை ஒருபுறமிருக்க, தனது மகளுடன் இணைந்து யூடியூப் வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.