மேலும் அறிய

Tata Punch EV: விபூதி அடித்த டாடா..! பஞ்ச் 590KM ஓடாதாம் - உண்மையான ரேஞ்ச் என்ன? பேட்டரி, விலை விவரங்கள்

Tata Punch Facelift EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா பஞ்சின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன், உண்மையிலேயே 590 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்குமா? என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Tata Punch Facelift  EV: டாடா பஞ்சின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன், 30KWh மற்றும் 40KWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யுவி:

டாடா நிறுவனத்தின் சார்பில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக, மைக்ரோ எஸ்யுவி ஆன பஞ்ச் திகழ்கிறது. இதன் மேம்படுத்தப்பட்ட மின்சார எடிஷன் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமான முறையில் இதன் தொடக்க விலை ரூ.9.69 லட்சமாகவும், BaaS எனப்படும் பேட்டரியை வாடகைக்கும் எடுக்கும் முறையில் தொடக்க விலை ரூ.6.49 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  டாப் எண்ட் வேரியண்ட்களின் விலை பேட்டரியுடன் சேர்த்து அதிகபட்சமாக ரூ.12.59 லட்சம் வரை நீள்கிறது. 30KWh மற்றும் 40KWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த இரண்டில் எந்த ஆப்ஷனை தேர்வு செய்தால், 590 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என்பதே தற்போது வாடிக்கையாளர்களின் கேள்வியாக உள்ளது.

590 கிலோ மீட்டர் ரேஞ்ச் கொடுக்குமா பஞ்ச்?

மேம்படுத்தப்பட்ட பஞ்சை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக, காரின் செயல்திறனை காட்டுவதற்காக டாடா நிறுவனம் சோதனை வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பஞ்ச் மாடலானது, ராஜஸ்தானின் ஜெய்பூரில் தொடங்கி குஜராத்தின் ஹிமத்நகர் வரை, அதாவது 593.6 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து அசத்தியது. இதனால், நெக்ஸானில் உள்ள 45KWh பேட்டரி ஆப்ஷன் புதிய பஞ்சில் வழங்கப்பட்டுள்ளதாக கருதப்பட்டது. ஆனால், அண்மையில் சந்தைப்படுத்தியபோது 30KWh மற்றும் 40KWh பேட்டரி ஆப்ஷன்கள் அப்படியே தொடர்வதாகவும், நிஜ உலகில் அதிகபட்சமாக 355 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் அளிக்கும் என்றும் பஞ்ச் நிறுவனம் அறிவித்துள்ளது. எனில் சோதனை வீடியோவில் வெளியானது பொய்யா என்ற கேள்வி வலுவடைந்துள்ளது.


Tata Punch EV: விபூதி அடித்த டாடா..! பஞ்ச் 590KM ஓடாதாம் - உண்மையான ரேஞ்ச் என்ன? பேட்டரி, விலை விவரங்கள்

பஞ்சின் 590 கிலோ மீட்டர் ரேஞ்ச் எப்படி சாத்தியம்?

பஞ்சின் 590 கிலோ மீட்டர் ரேஞ்ச் என்பது சில குறிப்பிட்ட ட்ரைவிங் வழிமுறைகளை பின்பற்றியதன் மூலமே சாத்தியமாகியுள்ளது. அதில் நிலையான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வேகம், சீரான ஆக்சிலரேஷன், ரிஜெனரேடிப் ப்ரேக்கிங் சிஸ்டத்தை சரியாக பயன்படுத்துவது, போக்குவரத்து நெரிசல் இல்லாத நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட வேகத்தில் (சிமார் 80 கிலோ மீட்டர்) மாற்றமின்றி தொடர்ந்து பயணித்தது ஆகியவை அடங்கும். இதில் வழங்கப்பட்டுள்ள 3 நிலைகளுக்கான பேடல் ஷிஃப்டட்கள் ப்ரேக் அடிக்கும்போது இழக்கும் ஆற்றலை சேமித்து, மீண்டும் பேட்டரிக்கு வழங்குவதன் மூலம் ஆற்றல் இழப்பு கணிசமாக குறைக்கப்படுகிறது. அடிக்கடி வேகத்தை ஏற்றி இறக்காமலும், ப்ரேக்கை பயன்படுத்தாமலும் செலுத்தியதன் மூலமாக 590 கிலோ மீட்டர் சாத்தியமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தினசரி பயன்பாட்டில் இதில் சாத்தியமில்லை என்பதே உற்பத்தியாளர்களின் கருத்தாக உள்ளது.


Tata Punch EV: விபூதி அடித்த டாடா..! பஞ்ச் 590KM ஓடாதாம் - உண்மையான ரேஞ்ச் என்ன? பேட்டரி, விலை விவரங்கள்

டாடா பஞ்ச் பேட்டரி, ரேஞ்ச் விவரங்கள்:

30KWh பேட்டரி ஆப்ஷனானது சோதனைகளின் அடிப்படையில் 365 கிலோ மீட்டர் ரேஞ்சும், நிஜ உலக பயன்பாட்டில் 270 கிலோ மீட்டர் ரேஞ்சும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாங் ரேஞ்ச் வேரியண்ட்களில் இடம்பெற்றுள்ள் 40KWh பேட்டரி ஆனது, சோதனைகளின் அடிப்படையில் 468 கிலோ மீட்டர் ரேஞ்சும், நிஜ உலக பயன்பாட்டில் 350 கிலோ மீட்டர் ரேஞ்சும் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய எடிஷன் பஞ்சானது பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை 9.5 விநாடிகளில் எட்டிய நிலையில், தற்போது அது 9 விநாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. பேட்டரிக்கு வாழ்நாள் வாரண்டி வழங்கப்பட்டுள்ளது. 65KW டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்துவதன் மூலம், 26 நிமிடங்களில் 20 முதல் 80 சதவிகிதத்தை எட்ட முடியுமாம். இதில் 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 135 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க முடியுமாம்.


Tata Punch EV: விபூதி அடித்த டாடா..! பஞ்ச் 590KM ஓடாதாம் - உண்மையான ரேஞ்ச் என்ன? பேட்டரி, விலை விவரங்கள்

டாடா பஞ்ச் விலை, போட்டியாளர் விவரங்கள்:

வேரியண்ட் விலை (பேட்டரியுடன்) பேட்டரி பேக்
ஸ்மார்ட் ரூ.9.69 லட்சம் 30KWh
ஸ்மார்ட் + ரூ.10.29 லட்சம் 30KWh
ஸ்மார்ட் + ரூ.10.89 லட்சம் 40KWh
அட்வென்சர்ட் ரூ.11.59 லட்சம் 40KWh
எம்பவர்ட் ரூ.12.29 லட்சம் 40KWh
எம்பவர்ட் ப்ளஸ் S ரூ.12.59 லட்சம் 40KWh

ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் டியாகோ மின்சார எடிஷனுக்கு மேலேயும், நெக்ஸான் மின்சார எடிஷனுக்கு கீழும் பஞ்ச் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் பஞ்ச் மின்சார கார் மாடலானது சிட்ரோயன் eC3, எம்ஜி விண்ட்சர், எம்ஜி கோமெட் ஆகியவற்றிடமிருந்து பிரதான போட்டியை எதிர்கொள்கிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget