Vanitha Ex-husband died : வனிதாவின் முன்னாள் கணவர் உயிரிழப்பு? இணையத்தில் பரவும் தகவல்!
நடிகை வனிதா விஜகுமார் முன்னாள் கணவர் பீட்டர் பால் இன்று காலை மரணமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார் முன்னாள் கணவர் பீட்டர் பால் திடீரென மரணம் அடைந்ததாகத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது மரணம் அடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்தும் பெற்ற வனிதா விஜயகுமார் தனக்கு ஒரு துணை வேண்டும் என பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பால் தனது மனைவி எலிசபெத்தை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. சோசியல் மீடியாவில் இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி ஏரளமான ட்ரோல்கள் செய்யப்பட்டன. பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல மோதல்களுக்கு பின்னர் நடைபெற்ற இவர்களின் திருமண வாழ்கை அதிக நாள் நீடிக்கவில்லை. இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவுகள் ஏற்பட்டது. கைவிட்டு இருந்த குடி போதை பழக்கத்தை மீண்டும் தொடங்கிய பீட்டர் பால் ஏகப்பட்ட அளப்பறைகள் செய்ய வனிதா - பீட்டர் பால் பிரிந்தனர். வனிதா கணவரை விரட்டியடித்ததாகவும் சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாகின.
குடி போதைக்கு அடிமையான பீட்டர் பாலுக்கு அல்சர், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்த பீட்டர் பால் உடல் நிலை கடந்த ஒரு வார காலமாக மோசமடைந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரின் இறப்பு செய்தி குறித்து எந்த ஒரு தகவலையும் நடிகை வனிதா விஜயகுமார் தனது சோசியல் மீடியா பக்கங்கள் மூலம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது பெரிய கேள்வி குறியாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீட்டர் பால் முன்னாள் மனைவி எலிசபெத் அவருக்கு குடி பழக்கம் இருப்பது குறித்து ஏற்கனவே எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரை பிரபலங்கள் மற்றும் பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் பீட்டர் பால் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
மூன்றாவது திருமணமும் முறிந்ததால் முடங்கிவிடாத வனிதா தொலைக்காட்சி, சீரியல், ரியாலிட்டி ஷோ, திரைப்படங்கள், யூடியூப் சேனல் என மிகவும் பிஸியாக இயங்கி வந்தார். தற்போது பீட்டர் பால் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.