Dhilip Subbarayan Twitter: என்ன 'வலிமை' கதையா? அது நானே இல்லப்பா.! ஃபேக் ஐடியால் சர்ச்சையில் சிக்கிய சண்டை மாஸ்டர்!!
வலிமை படத்தின் முதல் பாதியில் விசாரணை நடைபெறும் இரண்டாம் பாதியில் ஆக்ஷனும், சென்ட்டிமெண்ட்டும் இருக்கும் என வலிமை படத்தின் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் பெயரில் ட்விட்டரில் வெளியானது
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இப்படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து 'வலிமை' படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்தது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடமெல்லாம் வலிமை அப்டேட் குறித்து கேட்டு வந்தனர்.
இந்தநிலையில், கடந்த பொங்கலுக்கு வலிமை திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக படம் வெளியிடப்படும் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
This ID is Fake, please report and Block! Thank you 🙏 pic.twitter.com/B1eYciqxPU
— Dhilip Subbarayan (@dhilipaction) January 25, 2022
இதனையடுத்து படம் எப்பொழுது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், மார்ச் மாதத்தில் படம் வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகி வருகிறது.
இதற்கிடையே வலிமை படத்தின் கதை இதுதான் என தகவல் வெளியானது. அதன்படி, வலிமை படத்தின் முதல் பாதியில் விசாரணை நடைபெறும் இரண்டாம் பாதியில் ஆக்ஷனும், சென்ட்டிமெண்ட்டும் இருக்கும் என வலிமை படத்தின் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயன் பெயரில் ட்விட்டரில் வெளியானது. ட்விட்டரில் வெளியான இந்தத் தகவல் வைரலானது.
இந்நிலையில், தனது பெயரில் இருக்கும் ட்விட்டர் கணக்கு போலியானது எனவும் இந்த போலி ஐடியை ரிப்போர்ட் செய்து ப்ளாக் செய்ய வேண்டுமெனவும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திலீப் சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Vijay Rolls Royce Issue: முடிவுக்கு வந்தது விஜயின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம்! அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்