Ajith Kumar Doctor Interview: கையில் ரத்தம்.. வலியால் துடித்த அஜித்.. வலிமை விபத்துக்கு பின் நடந்தது இதுதான்!!
வலிமை படத்தில் அஜித் பைக் ஸ்டண்ட் செய்து போது ஏற்பட்ட அடிகள் குறித்து, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் பேட்டியளித்துள்ளார்.
இது குறித்து அஜித்திற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் நரேஷ் பத்மநாதன் பிஹைன்ட் வுட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்தார். அவர் பேசும் போது, “ வலிமை படத்துல ஒரு காட்சியில கீழே விழுந்து எழுந்தத மட்டும்தான் ரசிகர்கள் பாத்துருக்காங்க.. இது இல்லாம நாலு ஐந்து தடவை அவர் பைக் ஸ்டண்ட் செய்யும் போது அடிபட்டுருக்கு. அதுல எத்தனையோ நாட்கள் அவர் வலியில இருந்தது எனக்குத் தெரியும்.
அவர் மக்களுக்கு ஒரு பாசிட்டிவ்வான மெசஜ்ஜை கடத்தணும்னு பாக்குறாரு. அதை ரசிகர்கள் தவறாக புரிச்சிக்கக் கூடாது. அவருக்கு நிறைய தடவை இது போன்ற விபத்துகள் நடந்துருக்கு. முட்டியில, முதுகெலும்புல அப்படிணு நிறைய இடத்துல அடிபட்டு இருக்கு. நிறைய ஆப்ரேசஷனும் நடந்துருக்கு. கடந்த 10 15 வருஷத்துல அவருக்கு நிறைய விபத்துகள் நடந்துருக்கு.” என்று பேசினார்.
இது எல்லாத்தையும் தாண்டி அஜித் இப்படி இருக்கிறார் என்றால் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களை நாம் பாராட்ட வேண்டும். மேலும் கடவுளின் அனுகிரகமும், அவரின் தன்னம்பிக்கையும் தான் அவரை இப்படி இருக்க வைக்கிறது. சாதரண மனிதர்களால் இப்படி இருக்க முடியாது. அவருக்கு கழுத்துப்பகுதி, முதுகின் நடுப்பகுதி, கீழ்பகுதி, இரண்டு கைகள், கால்கள் உள்ளிட்டவற்றில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
அவருக்கு தன்னம்பிக்கை மிக அதிகம். அவர் எப்போதுமே மற்றவருடைய பணத்தையோ, நேரத்தையோ வீணாக்க மாட்டார். அதனால்தான் சில படப்பிடிப்புகளின் அடிப்பட்டால் கூட, அந்த வலியையும் பொருட்படுத்தாமல் அந்த காட்சியை முடித்துக்கொடுத்து வருகிறார். வலிமை படத்தில் வருவது போலவே, ரசிகர்கள் பைக்கில் ஸ்டண்ட் செய்ய முயற்சிக்கின்றனர். அப்படி செய்யக்கூடாது. காரணம் அதில் ஏதாவது நடந்தால், அது அவர்களை மட்டுமல்லாது, அவரது குடும்பத்தினரையும் பாதிக்கும்.” என்று பேசினார்.
அஜித் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வலிமை திரைப்படம் கடந்த மாதம் 24 ஆம் தேதி வெளியானது. படம் வெளியான அன்றைய நாள், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தத் திரைப்படத்தை பெரும்பான்மையான திரைப்பட விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர். சிலர் அஜித்தை தனிமனித தாக்குதலுக்கும் உட்படுத்தினர்.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல படத்தை பார்த்த பலர் படம் நன்றாகவே இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்தில் பெரும்பான்மையான காட்சிகள், பைக் ஸ்டண்ட் சார்ந்தவை என்பதால், டூப் இல்லாமல் அஜித் ரிஸ்க் எடுத்து அந்த ஸ்டண்டுகளில் நடித்திருந்தார். இந்தக் காட்சிகள் படமாக்கப்பட்ட போது அஜித்திற்கு பலமுறை காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.