கவிஞர் வைரமுத்துவிற்கு ஓஎன்வி குறுப் இலக்கிய விருது  அறிவிப்பு

கவிஞர் வைரமுத்துக்கு மலையாள இலக்கிய உலகின் தேசிய விருதாகக் கருதப்படும் ஓஎன்வி குறுப் இலக்கிய விருது  அறிவிக்கப்பட்டுள்ளது. 

FOLLOW US: 

கவிஞர் வைரமுத்துக்கு மலையாள இலக்கிய உலகின் தேசிய விருதாகக் கருதப்படும் ஓஎன்வி குறுப் இலக்கிய விருது  அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்திய எழுத்தாளர்களின் மிக முக்கியமானவரான ஓஎன்வி. குறுப். தனது இலக்கியப் படைப்புகளுக்காக ஞானபீட விருதை வென்றவர்.  சிறந்த பாடலுக்காக தேசிய விருதும் பெற்றிருக்கிறார். 25 கவிதைத் தொகுதிகளை அவர் வெளியிட்டிருக்கிறார். இதுவரை இவ்விருது சுகதகுமார், எம்.டி.வாசுதேவன், நாயர், அக்கிதம் அச்சுதன், நம்பூதிரி, லீலாவதி அகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்துவிற்கு ஓஎன்வி குறுப் இலக்கிய விருது  அறிவிப்புஅவர் மறைவுக்குப் பின்னர் அவரின் நினைவாக இந்த விருது கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து இலக்கியத் துறை சார்ந்தோருக்கு வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூ.3 லட்சம் பணமுடிப்பும் வழங்கப்படுகிறது. 2020ம் ஆண்டுக்கான ஓஎன்வி. குறுப் விருதுக்கு வைரமுத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தேர்வுக் குழுவில் மலையாளப் பல்கலைக்கழக துணை வேந்தர் அனில் மெல்லத்தோல், கவிஞர்கள் அலக்கொண்டே லீலாகிருஷ்ணன், பிரபா வர்மா அகியோர் இடம்பெற்றுள்ளனர். கவிஞர் வைரமுத்து இதுவரை 7 தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். பத்மபூஷன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 
இந்நிலையில், தேசிய அளவிலான இந்த உயரிய விருதைப்பெறும் மலையாள மொழியல்லாத முதல் கவிஞர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  "தேசிய அளவிலான இந்த உயரிய விருதைப் பெறும் மலையாள மொழியல்லாத முதல் கவிஞர் என்ற பெருமையை கவிப்பேரரசு பெற்று, அன்னைத் தமிழுக்கும் சிறப்பு சேர்த்திருக்கிறார். தமிழுக்கு பெருமை சேர்த்திடும் கவிப்பேரரசின் இலக்கியப் பயணம் சிறந்திட வாழ்த்துகள்" எனத் தெரிவித்திருக்கிறார்.
கொரோனா பெருந்தொற்று காரணத்தால் விருது வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். விருது பற்றி பேசியுள்ள கவிஞர் வைரமுத்து, "ஓஎன்வி குறுப் இலக்கிய விருது பெறுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். ஓஎன்வி குறுப் கவிதைக்கும் பாடலுக்கும் இருந்த இடைவெளியைக் குறைத்தவர் அல்லது அழித்தவர். உலக இலக்கியத்துக்கு இணையாக அவர் மலையாளத்தில் இலக்கியம் படைத்திருக்கிறார். மலையாளத்தின் காற்றும் தண்ணீரும்கூட இலக்கியம் பேசும். அந்த மண்ணிலிருந்து பெறும் விருதை நான் மகுடமாகக் கருதுகிறேன்.இந்த உயரிய விருதை உலகத் தமிழர்களோடும், சக படைப்பாளிகளோடும் பகிர்ந்துகொள்கிறேன்" என்று நெகிழ்ச்சி பொங்க தெரிவித்திருக்கிறார்.கவிஞர் வைரமுத்துவிற்கு ஓஎன்வி குறுப் இலக்கிய விருது  அறிவிப்பு

வைரமுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பாடல் ஆசிரியர். 80களிலிருந்து தற்போது வரை அனைவரையும் தனது எழுத்தக்களால் கட்டிப் போட்டவர். காதல், சோகம், பாசம், கிராமம் என அவர் தொடாத எழுத்துக்களே இல்லை. இளையராஜாவில் இருந்து இமான் வரை பணியாற்றியிருக்கும் வைரமுத்து, இன்னும் இளைஞர்களை எழுத்துக்களால் கட்டிப்போடுகிறார். பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ள வைரமுத்துவிற்கு இந்த விருது, அவரது மணிமகுடத்தில் மற்றொரு மாணிக்க கல் என பலரும் போற்றுகின்றனர்.  விரைவில் அறிவிக்கப்படும் அந்த விழாவில் விருதை அவர் பெற உள்ளார். 

Tags: Vairamuthu onv award kerala award onv kurup award

தொடர்புடைய செய்திகள்

Maanadu Meherezylaa | மாநாடு பாடல் டீசர் இன்று ரீலிஸ்!

Maanadu Meherezylaa | மாநாடு பாடல் டீசர் இன்று ரீலிஸ்!

Rajinikanth Health: அமெரிக்கா புறப்பட்ட ரஜினி: தாமதமான சிகிச்சையும்... தனுஷ் உடன் சந்திப்பும்!

Rajinikanth Health: அமெரிக்கா புறப்பட்ட ரஜினி: தாமதமான சிகிச்சையும்... தனுஷ் உடன் சந்திப்பும்!

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

15 ஆண்டுகளுக்கு முன்பு டைவர்ஸ் : திருமண நாளன்று மீண்டும் ஒன்றுசேர்ந்த ரஞ்சித் - ப்ரியா ராமன் காதல்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

Dhanush | தேசிய விருது பெற்ற இயக்குநர் இயக்கத்தில் தனுஷ்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

தாமரை லிரிக்ஸ் போதும்னு சொல்றீங்களா? உங்களுக்குத்தான் இந்த ப்ளேலிஸ்ட்..!

டாப் நியூஸ்

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Milka Singh Passes away: 'பறக்கும் சீக்கியர்' மில்கா சிங் எனும் சகாப்தம் !

Tamil Nadu Coronavirus LIVE News : தேசிய அளவில் தினசரி தொற்று வளர்ச்சி விகிதம் மைனஸ் ஆக சரிந்தது

Tamil Nadu Coronavirus LIVE News : தேசிய அளவில் தினசரி தொற்று வளர்ச்சி விகிதம் மைனஸ் ஆக சரிந்தது

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

‛வேலைக்கு போகச் சொன்னது குத்தமா...’ குடும்பத்தையே ‛குளோஸ்’ செய்த கொடூர இளைஞர்!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!

என்னது ஏரோபிளேன் ‛ஸ்கிட்’ ஆச்சா... நம்ம ஊரு ரோடு பரவாயில்லையே!