Vaidehi Kathirundhal serial update: புத்தம்புது சீரியலுக்கு முடிவுரை எழுதிய பிரபல டிவி சேனல்... ஏன் தெரியுமா?
டிஆர்பி ரேட்டிங்கில் மிகவும் பின் தங்கி இருந்ததால், சீரியலை ஒளிபரப்பும் சேனல் இம்முடிவை எடுத்திருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று “வைதேகி காத்திருந்தாள்”. சமீபத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த சீரியலில் பிரஜின் - சரண்யா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தனர். திரைப்பட வாய்ப்பு வந்ததால் பிரஜின் சீரியலைவிட்டு விலக, அவருக்கு பதில் முன்னா கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். இந்நிலையில், சீரியலையே இழுத்து மூட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக பிரஜின் - சரண்யா ஜோடி சேர்ந்து நடித்து வந்தபோதும், ரசிகர்கள் மத்தியில் பெரிதாக ஹிட்டாகவில்லை இந்த சீரியல். பிரஜின் எதிர்ப்பார்த்த பட வாய்ப்பு வந்துக்கொண்டிருப்பதால், சினிமா மற்றும் சீரியல் என இரண்டிற்கும் கால்சீட் கொடுப்பதற்குப் பிரச்சனை வந்ததால் சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. இந்நிலையில், சீரியல் பாதியில் கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வைதேகி காத்திருந்தாள் சீரியலில் இனி பிரஜினுக்கு பதில் முன்னா என நான்கு நாட்களுக்கு முன்னர்தான் புது எபிசோட் ஒளிபரப்பானது. அதனை அடுத்து, இப்படி ஒரு செய்தி வெளியாகி இருப்பதால் சீரியல் குழுவினர் ஏமாற்றத்தில் உள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை முன்னணி நடிகர், நடிகைகள் பகிரவில்லை என்றாலும், பிரஜினுக்கு பதில் ஒப்பந்தம் செய்யப்பட்ட முன்னா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நடப்பவை எல்லாம் நன்மைக்கே” என கேப்ஷனோடு பதிவு செய்திருக்கிறார்.
View this post on Instagram
இதனால், இந்த சீரியல் முடிவுக்கு வந்துவிட்டது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. டிஆர்பி ரேட்டிங்கில் மிகவும் பின் தங்கி இருந்ததால், சீரியலை ஒளிபரப்பும் சேனல் இம்முடிவை எடுத்திருக்கலாம் என தகவல் கிடைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்