மேலும் அறிய

Vadivelu : ”அந்த சீன் எடுக்கும் பொழுது விஜய்யால சிரிப்ப அடக்க முடியல” - வடிவேலு ஓபன் அப்!

"நான் சொல்வதை மட்டுமே  செய்யனும்னு சொல்லுற இயக்குநர்களிடம் எனக்கு வேலை பார்க்க பிடிக்காது. ஆக்‌ஷன் ஹீரோக்கள்கிட்ட"

வடிவேலு எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு கலைஞன். இதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதல்ல. கடந்த வருடம்  வடிவேலு நடித்த  நேசமணி கதாபாத்திரம் மீம்ஸாகவும், போஸ்டாகவும் சமூக வலைத்தளங்களில் கலக்கியது. படத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை நிஜத்தில் இருப்பது போலவே நெட்டிசன்கள் பேச தொடங்கினர். குறிப்பாக அவர் தலையில் சுத்தியல் விழுந்ததற்கெல்லாம் பிராத்தனை செய்தது வேற லெவல் . என்னதான் ஃபன்னாக இருந்தாலும் கூட , வடிவேலு என்னும் கலைஞனை ரசிகர்கள் எந்த அளவிற்கு மிஸ் பண்ணுறாங்க என்பதை உணர முடிந்தது. வடிவேலும் கம் பேக் கொடுக்க இந்த நேசமணி கேரெக்டர் வைரல் ஆனதும் மிக முக்கியமான காரணம் என்றால் மிகையில்லை. இந்த நிலையில் ஃபிரண்ட்ஸ் படத்தில் இடம்பெற்ற நேசமணி காமெடியில் நடித்த அனுபவம் குறித்து வடிவேலு பகிர்ந்திருந்தார்.

Vadivelu : ”அந்த சீன் எடுக்கும் பொழுது விஜய்யால சிரிப்ப அடக்க முடியல” - வடிவேலு ஓபன் அப்!

அதில்“ அந்த காமெடியில் 200 வருசத்துக்கு முன்னால வாங்குன கடிகாரம்டானு சொன்னதும்.... ஹப்பாடா நான் கூட புதுசுனு நினைச்சேங்கன்னு சொன்னதும் விஜயெல்லாம்  10 , 20 முறை சிரிச்சாரு. நிறைய டேக் வாங்கிட்டே இருக்காரு. அப்போ சித்திக் சார் விஜய் சார்க்கிட்ட சொன்னாரு ,சார் 8, 9 டேக் போச்சு , கொஞ்சம் ப்ளீஸ் உங்க நாக்கை மட்டும் கடிச்சுக்கோங்க அப்படினு. அவரும் ஓக்கேன்னு இருந்தாரு. அந்த காமெடிக்கு ஹிட் இயக்குநர் என்னை நம்பினார் . அதே போல அறுவாள் தூக்கிக்கொண்டும் ஓடும் காட்சி ஒன்றில் நான் எட்டிப்பார்த்துக்கொண்டே ஓடுவது போல இருக்கும். அவர் எட்டி மட்டும்தான் பார்க்க சொன்னாரு . நான் அப்படியே ஓடினேன். அதை பார்த்து என்னை சித்திக் சார் வெகுவாக பாராட்டினார். கேரளாவில் இருந்தும் கூட பாராட்டுகள் வந்தன. நான் சொல்வதை மட்டுமே  செய்யனும்னு சொல்லுற இயக்குநர்களிடம் எனக்கு வேலை பார்க்க பிடிக்காது. ஆக்‌ஷன் ஹீரோக்கள்கிட்ட அதை சொல்லனும் இல்லைனா புதுசா வருபவர்களிடம் அதை சொல்லனும் , என்னிடம் இல்லை” என்றார் வடிவேலு.

முன்னதாக நடிகர் மதன் பாப் இந்த காமெடி எடுத்த விதம் குறித்து பகிர்ந்திருந்தார் அதில் “”இதோ வந்துட்டேன்னு ஓடி வரும் பொழுது ராதாரவி கிடையாது. நான் வழுக்கி விழும் பொழுது  நான் மட்டும்தான் இருந்தேன். அடுத்து நான் எட்டி உதைக்கும் பொழுது என் கால் மட்டும் வேறு ஒருத்தர் மேல போய் படும். அவர் கரி டிரம்மில் போய் விழும் பொழுது  அவர் கூட உள்ளவங்க இருந்துருப்பாங்க. அதன் பிறகு  விஜய் , சூர்யா , ரமேஷ் கண்ணா சிரிக்கும் பொழுது அவங்க தனியா சிரிப்பாங்க. தேவையானி தனியா சிரிப்பாங்க. நான் தனியா சிரிப்பேன்.

ராதா ரவி தனியா சிரிப்பாங்க. எல்லா காட்சிகளையும் இப்படி  தனித்தனியா எடுத்துதான் ஜாயின் பண்ணாங்க. ரொம்ப பேரு சீரியஸ் சீன் எல்லாம் பயங்கரமா எடுப்பாங்க. காமெடி சீனை ரொம்ப அலட்சியம் செய்வாங்க. காமடிதானே அப்படினு. ஆனால் காமெடி சீனையும் சீரியஸா , நுணுக்கமா எடுத்தா ஹிட் ஆகும் என்பதற்கு இந்த நேசமணி காமெடி ஒரு உதாரணம் .  நேசமணிக்காக இத்தனை கோடி பேர் வேண்டிக்கொண்டதில் இருந்து அதன் வெற்றி தெரியுதில்லையா. வடிவேலு அந்த சீன்ல எண்ணையில வழுக்கி விழுந்த மாதிரியாக காட்சி இருக்கு. அப்போ அவர் கால் அடிப்பட்டுருந்துச்சு. வின்னர் படத்தில் வடிவேலு நொண்டி நடப்பது போல இருக்குமல்லவா அப்போது அவருக்கு உண்மையிலேயே காலில் அடிப்பட்டுருந்தது. மதுரையில் அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.” என்றார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!Dharmendra Yadav: ’’நாலு தேர்தல் ஒழுங்கா நடத்தமுடில..நாடு முழுக்க நடத்த போறீங்களா?’’ கிழித்தெடுத்த சமாஜ்வாதி MP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்
Breaking News LIVE 18th DEC 2024:  கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
Breaking News LIVE 18th DEC 2024: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு 400 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு - முதல்வர்
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
IND vs AUS 3rd Test: விடிந்ததுமே இந்திய அணி ஆல்-அவுட் - ரசிகர்கள் ஷாக், ஆஸ்திரேலியா அணி 185 ரன்கள் முன்னிலை
Embed widget