மேலாடையின்றி போட்டோ... ரன்வீருக்கு போட்டியாக இறங்கிய பிக்பாஸ் நடிகை!
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகையான உர்ஃபி ஜாவித், இந்தி பிக் பாஸின் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் வித்தியாசமான உடை அணிவதற்கு பிரபலமானவர்.
பிரபல பாலிவுட் நடிகை உர்ஃபி ஜாவித் மேலாடையின்றி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகையான உர்ஃபி ஜாவித், இந்தி பிக் பாஸின் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் வித்தியாசமான உடை அணிவதற்கு பிரபலமானவர். அவர் ஆடையை கிழித்து அணிகிறார் என ஒவ்வொரு முறையும் புகைப்படத்தை பதிவிடும் பலரும் கிண்டல் செய்வது வழக்கம். சில மாதங்களுக்கு முன் பெயர் குறிப்பிட முடியாத ஒருவர் என்னை பட வாய்ப்புக்காக தனிமையில் இருக்க அழைத்தார் என கூறி அதிர வைத்தார்.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் கூட வெறும் பச்சை நிற நூலை மட்டும் உடம்பில் சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்திருந்தார். வித்தியாசமான ஆடையால் சில ஆடை வடிவமைப்பாளர்கள் தன்னுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை என்றும், என்னுடைய ஆடைகளை மற்றவர்கள் கிண்டல் செய்வதால் அவர்களுக்கு என்னை பிடிப்பதில்லை என உர்ஃபி ஜாவித் தெரிவித்திருந்தார்.
இதனிடையே கடந்த ஜூலை மாதம் கடைசி வாரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடத்திய நிர்வாண போட்டோஷூட் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்தை அதிர வைத்தது. ஒருபுறம் ரன்வீர் சிங்கின் துணிச்சலான முயற்சியை பாராட்டினாலும் மறுபுறம் அவர் மீது காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. பிரபல பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன், ஆலியா பட், ராக்கி சாவந்த் ஆகியோர் ரன்வீருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
View this post on Instagram
இந்நிலையில் ரன்வீருக்கு போட்டியாக நடிகை உர்ஃபி ஜாவித் களமிறங்கியுள்ளதாக உள்ளதாக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். அவர் அப்படி என்ன செய்தார் என உர்ஃபியின் சமூக வலைத்தளப் பக்கத்தை ஆராய்ந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மேலாடையின்றி தலைமுடியால் தனது உடலை மறைத்தபடி அவர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.