Nenjuku neethi: "நடுவுல நிக்கிறது இல்ல.. நியாயத்து பக்கம் நிக்குறதுதான் நியூட்ரல்" - வெளியானது நெஞ்சுக்கு நீதி டீசர்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியில் ஹிட்டான ‘ஆர்டிக்கிள் 15’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் வெளியாக உள்ளது. இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடந்து, இதன் படப்பிடிப்பு பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.
இப்படத்தின் டீசர் கடந்த 6 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அப்போது வெளியிடப்பட இருந்த நெஞ்சுக்கு நீதி டீசர் தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், “லதா மங்கேஷ்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இன்று வெளியாக இருந்த படத்தின் டீசர் ஒத்திவைக்கப்படுகிறது. நாட்டு மக்களோடு இந்த சோகத்தில் பங்கு கொள்கிறோம்” என தெரிவித்திருந்தார்.
இத்திரைப்படத்தின் படத்தொகுப்பை ரூபன் செய்கிறார். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஓகே ஓகே போன்ற காமெடி ஜானரில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், மனிதன், நிமிர், பிசாசு போன்ற திரைப்படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஆர்டிகிள் படத்தில் உதயநிதி நடித்திருப்பது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று நெஞ்சுக்கு நீதி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் உதயநிதி ஸ்டாலின் “நடுவுல நிக்கிறது இல்ல சார் நியூட்ரல்.. நியாயத்து பக்கம் நிக்குறதுதான் நியூட்ரல்” என பேசும் டையலாக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
It’s time to fight for what’s right! Catch the official teaser of #NenjukkuNeedhi in cinemas and online!https://t.co/chUfzShS5L@ZeeStudios_ @Udhaystalin @BayViewProjOffl @kalaignartv_off
— Boney Kapoor (@BoneyKapoor) February 11, 2022
#RomeoPictures @mynameisraahul @Arunrajakamaraj @actortanya @Aariarujunan
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்