''தியேட்டர் ஃபேன்ஸ் கூட ஓடிடிக்கு வரணுமாம்..'' மனைவி கிருத்திகா குறித்து கலகலவென பேசிய உதயநிதி!
நடிகர் காளிதாஸ் ஜெயராம், நடிகை தான்யா ரவிச்சந்திரன் இணைந்து நடித்துள்ள வெப் சீரிஸ் பேப்பர் ராக்கெட். இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. இதனை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார்.
நடிகர் காளிதாஸ் ஜெயராம், நடிகை தான்யா ரவிச்சந்திரன் இணைந்து நடித்துள்ள வெப் சீரிஸ் பேப்பர் ராக்கெட். இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. இதனை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார்.
இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
கிருத்திகா இந்தப் படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். இதன் படப்பிடிப்பின்போது கிருத்திகாவின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதற்காக கிருத்திகா மருத்துவமனை சென்றார். ஆனால் அவர் அம்மாவோ உனக்கு வேலை தான் முக்கியம். நான் சீக்கிரம் சரியாகி வீடு திரும்புவேன் என்று சொல்லி அனுப்பிவைத்தார். கிருத்திகாவும் சரி அவர் அம்மாவும் சரி துணிச்சலானவர்கள்.
அந்த துணிச்சல் கிருத்திகாவின் படைப்புகளில் பிரதிபலிக்கும். கிருத்திகா பேப்பர் ராக்கெட் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் துணிச்சலுடன் எழுதியிருக்கிறார். இந்த வெப் சீரிஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. ரிலீஸை நினைத்து கிருத்திகா டென்ஷனாக இருக்கிறார்.
அண்மையில் சந்தானம் அவரது குலுகுலு படத்தை எனக்கு திரையிட்டுக் காட்டினார். படத்தை ரிலீஸ் செய்துதருமாறு கேட்டார். நானும் சரியென்று சொன்னேன். இது பற்றி கிருத்திகாவிடம் பேசினேன். அப்போது அவர் டென்ஷனாகிவிட்டார். என் படமும் 28ஆம் தேதி தானே ரிலீஸாகிறது. நீ இன்னொரு நாள் ரிலீஸ் செய் என்றார். நான் திரையரங்குகளில் தானே ரிலீஸ் செய்கிறேன் என்றேன். ஆனாலும் அவருக்கு பதட்டம் குறையவில்லை. திரையரங்கும் செல்லும் ஆடியன்ஸ் கூட அன்றைய தினம் ஓடிடியில் அவர் வெப் சீரிஸ் காண வரவேண்டும் என்பதே கிருத்திகாவின் எதிர்பார்ப்பு.
இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.
நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா கடந்த 2013 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை திரைப்படமான வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார்.
அந்தப் படத்தில் சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடித்திருப்பர். அவர்களுடன் சந்தானம், ராகுல் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் நடித்திருப்பர். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பில் இந்தப் படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இப்படம் வரவேற்பை பெற்றிருந்தது வணக்கம் சென்னை.
இதையடுத்து கிருத்திகா விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தை இயக்கினார். விஜய் ஆண்டனி கொள்ளைக்காரனாக நடித்த இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான காளி படத்தை பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருந்தார். விஜய் ஆண்டனியே இசையமைத்திருந்தார்.
தற்போது இவர் பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸ் மூலம் ஓடிடி தளத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார் கிருத்திகா உதயநிதி.
இந்த வெப் சீரிஸில் காளிதாஸ் ஜெயராம், தானியா ரவிச்சந்திரன், கௌரி ஜி கிஷான், பூர்ணிமா பாக்கியராஜ், சின்னி ஜெயந்தி, கருணாகரன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது ஜீ 5 ஓடிடி தளத்தில் ஜூலை 28 அன்று திரையிடப்படும் என தெரிகிறது.