(Source: ECI/ABP News/ABP Majha)
“96 படத்தால அப்பாவிடம் போட்டுக்கொடுத்துட்டார் கிருத்திகா”: உதயநிதி பகிர்ந்த சுவாரஸ்யம்!
என் மகன் தமிழில் நான் மட்டும் தான் ஹீரோன்னு நினைச்சுட்டு இருக்கிறார் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
என் மகன் தமிழில் நான் மட்டும் தான் ஹீரோன்னு நினைச்சுட்டு இருக்கிறார் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்எல்ஏ, நடிகர், தயாரிப்பாளர் என்று படு பிஸியாக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
என் மகன் அப்படி நினைக்கிறார்:
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா. இவரும் திரைத்துறையில் இருக்கிறார். கிருத்திகா கடந்த 2013 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை திரைப்படமான வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார்.
அந்தப் படத்தில் சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடித்திருப்பர். அவர்களுடன் சந்தானம், ராகுல் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் நடித்திருப்பர். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பில் இந்தப் படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இப்படம் வரவேற்பை பெற்றிருந்தது.
இதையடுத்து கிருத்திகா விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தை இயக்கினார். விஜய் ஆண்டனி கொள்ளைக்காரனாக நடித்த இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான காளி படத்தை பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருந்தார். விஜய் ஆண்டனியே இசையமைத்திருந்தார். தற்போது இவர் பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸ் மூலம் ஓடிடி தளத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
இத்தம்பதிக்கு இன்பா, தன்மயா என்று ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகன் இன்பா பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின், "நானும் என் மகனும் பேசும்போதெல்லாம் அவர் எனது நடிப்பை பாராட்டியிருக்கிறார். அவர் தமிழில் நான் நடிக்கும் படங்களைத் தவிர வேறு படங்களையே பார்ப்பதில்லை என்பதால் தமிழில் நான் மட்டும் தான் ஹீரோ என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார். அவர் நிறைய ஆங்கிலப் படங்கள் பார்க்கிறார்.
96 பார்த்து கனெக்ட் ஆச்சு:
நானும் கிருத்திகாவும் வீட்டில் தான் 96 திரைப்படம் பார்த்தோம். அப்பா, அம்மா எல்லோரும் சேர்ந்து தான் பார்த்தோம். அப்போது ஒரு காட்சியில் ஒரு மால் வரும். அதைக்காட்டி நாங்கள் ரகசியமாகப் பேசிக் கொண்டோம். அப்போ அப்பா என்னவென்றார். கிருத்திகா, அங்கிள் என் கிட்ட உதய் இந்த இடத்தில் வைத்து தான் காதலைச் சொன்னார் என்று கூறினார்" என்றார்.
ஸ்க்ரிப்ப்டில் உதவுகிறார்:
மனைவி கிருத்திகா தனக்கு திரைப் பணிகளில் பக்கபலமாக இருப்பதாக உதயநிதி கூறினார். தன்னுடன் சேர்ந்து ஸ்க்ரிப்ட் ஓகே செய்வது, லாஜிக் ஓட்டைகளை சுட்டிக் காட்டுவது, ஏ சென்டர் ஆடியன்ஸுக்கு ஏற்ற டிப்ஸ் சொல்வது என்று மனைவி கிருத்திகா உதவியாக இருப்பதாக உதயநிதி கூறினார். மனைவி கிருத்திகாவிடம் தான் வைத்துள்ள ஒரே ஒரு கோரிக்கை தமிழிலும் நிறைய படிக்க வேண்டும் என்பது மட்டுமே என்று கூறினார்.