மேலும் அறிய

Udhayam Theatre: செக் மோசடி வழக்கு... முன்னாள் நிர்வாகி கைது பற்றி உதயம் திரையரங்கம் விளக்கம்

செக் மோசடி வழக்கில் சென்னை உதயம் தியேட்டர் உரிமையாளர் மணி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

செக் மோசடி வழக்கில் உதயம் திரையரங்க உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன், தவறான தகவலைப் பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உதயம் திரையரங்க நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா பைனான்சியர் போத்ரா கடந்த 2002 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளான முன்னாள் காங்கிரஸ் எம்பி இரா அன்பரசு மற்றும் அவரது மனைவி, உதயம் தியேட்டர் முன்னாள் உரிமையாளர் மணி ஆகியோரிடம் 35 லட்ச ரூபாய் பணம் கடனாக கொடுத்துள்ளார். இந்தப் பணத்தை வைத்து ஸ்ரீபெரும்புதூரில் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் உதயம் இன்ஜினியரிங் கல்லூரி கட்டுவதற்காக வாங்கியதாக கூறப்படுகிறது.

பணத்தை திருப்பிக் கொடுக்காததால் முன் தேதியிட்டு கொடுக்கப்பட்ட செக் வங்கியில் செலுத்தும் போது பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இது தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2015 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிர்வாகி முன்னாள் எம் பி ரா அன்பரசு மற்றும் அவரது மனைவி, உதயம் தியேட்டர் உரிமையாளராக இருந்த மணி ஆகியோருக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இறுதியில் உச்ச நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததை அடுத்து, தண்டனை விதிக்கப்பட்டவர்களை கைது செய்ய உயர் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் எம்பி இரா அன்பரசு மற்றும் அவரது மனைவி காலமானதால், உதயம் தியேட்டர் உரிமையாளராக இருந்த மணி என்பவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கைது செய்து சிறையில் அடைக்க கீழ்ப்பாக்கம் காவல்துறைக்கு உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காததால், சினிமா பைனான்சியர் போத்ரா தரப்பில் போடப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கீழ்பாக்கம் துணை ஆணையர் கைது நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில் மணியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் செக் மோசடி வழக்கில் உதயம் திரையரங்க உரிமையாளர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் பரவிய நிலையில், இதற்கு உதயம் திரையரங்க நிர்வாகம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அருணா தியேட்டர்ஸ் அண்ட் எண்டர்பிரைசஸ் ப்ரைவேட் லிமிட்டட் உதயம் திரையரங்கம் - சென்னை நிர்வாகத்தினர் பொது மக்களுக்கு தெரிவிக்கும் அறிவிப்பு என்னவென்றால், ஒரு சில ஊடகங்களிலும் சில பத்திரிகைகளிலும் செக் மோசடி வழக்கில் உதயம் திரையரங்க உரிமையாளர்  மணி  கீழ்ப்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணி அவர்கள் உதயம் தியேட்டர் உரிமையாளரோ அல்லது பங்குதாரரோ இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

தவறுதலாக அறிவிப்பினை வெளியிடுபவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என உதயம் திரையரங்க நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
Jailer 2: டைகர் வந்துட்டாரு.. ஜெயிலர் 2 நாளை ரிலீஸ்! கொண்டாட்டத்தை தொடங்கிய ரஜினி ரசிகர்கள்!
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
கைவிடப்பட்ட வேட்டை மன்னன்.. கைவிடாத நெல்சன்.. புதிய உச்சம் தொடுவாரா நெல்சன்?
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை
இதுதான்யா வெறித்தனம்! ‘ஜெயிலர் 2’ ஃபீவர் ஸ்டார்ட்.. ரஜினி ரசிகரின் வேற மாதிரி சாதனை

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget