மேலும் அறிய

Tovino Thomas: ஆஸ்கருக்கு முன்னாடி சின்ன டெமோ... 2018 திரைப்படத்துக்கு விருது.. டோவினோ தாமஸ் சாதனை!

சிறந்த ஆசிய நடிகருக்கான சர்வதேச விருதை வென்றுள்ளார் மலையாள நடிகர் டொவினோ தாமஸ்.

டொவினோ தாமஸ் நடித்த 2018 திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ள நிலையில், தற்போது சிறந்த ஆசிய நடிகருக்கான சர்வதேச விருதை வென்றுள்ளார் நடிகர் டொவினோ தாமஸ்.

டொவினோ தாமஸ்

மலையாளத் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் டோவினோ தாமஸ். மாயா நதி, மின்னல் முரளி, தள்ளுமாலா முதலிய படங்களின் மூலம் மலையாள ரசிகர்கள் தாண்டியும் கவனமீர்த்தார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘2018’ இந்தியா முழுவதிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

2018ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவானது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைப் பெற்றதோடு மட்டுமில்லாமல் 2018 திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. மலையாள சினிமாவில் அதிக வசூல் ஈட்டிய படங்களின் வரிசையில் இடம்பெற்றது. மேலும் மக்களிடம் ’இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி” என்கிற பாராட்டுக்களையும் பெற்றது.

ஆஸ்கர் தேர்வு

மேலும் 2024ஆம் ஆண்டில் நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருது விழாவிற்கு இந்தியா சார்பில் டொவினோ தாமஸ் நடித்திருக்கும் 2018 திரைப்படம் தேர்வாகி இருக்கிறது. இந்தத் தகவலைத் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியாக பகிர்ந்துகொண்டார் நடிகர் டொவினோ தாமஸ்.

சிறந்த ஆசிய நடிகர்

மேலும் ஆஸ்கர் விருதைப் போல் மற்றுமொரு முக்கியமான விருதான செப்டிமியஸ் விருதிற்கு சிறந்த ஆசிய நடிகர் பிரிவின் கீழ் பரிந்துரைக்கப் பட்டிருந்தார் டோவினோ தாமஸ். இந்நிலையில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நெதர்லாந்தில் நடைபெற்ற இந்த சர்வதேச செப்டிமியஸ் விருது விழாவில் சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்றுள்ளார் டொவினோ தாமஸ்.  இதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள திரையுலகப் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

வெளிவர இருக்கும் படங்கள்

தற்போது டொவினோ தாமஸ் நடிகர் திலகம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஹனி பீ ஆகிய படங்களை இயக்கிய லால் ஜூனியர் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டாரான டேவிட் படிக்கல்லின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து டொவினோ தாமஸ் ஏ.ஆர்.எம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். டொவினோ தாமஸின்  முதல் பான் இந்தியத் திரைப்படமாக இது இருக்கும். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் டோவினோ தாமஸ் 1900, 1950, 1990 என மூன்று காலங்களைச் சேர்ந்த மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாசில் ஜோசப் இயக்கத்தில் வெளிவந்து கவனமீர்த்த மின்னல் முரளி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார்.

 

தலைப்பு செய்திகள்

“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
“இங்கு நான் தான் கிங் .. ” ரஜினியை ஓவர் டேக் செய்த விஜய்... ரூ.1000 கோடி வசூலித்து வரலாற்று சாதனை
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
மீண்டும் வருகிறான் லக்கி பாஸ்கர்? பார்ட் 2 எப்போது? வெங்கி அட்லூரி சூப்பர் அப்டேட்
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
பிக்பாஸ் விக்கல்ஸ் விக்ரம் நடித்துள்ள லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்
சம்பளத்தை விட கதைதான் முக்கியம்... இத்தனை படங்களுக்கு ஒரு ரூபாய் கூட வாங்காத ஜி.வி. பிரகாஷ்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget