Top 5 Onam : ஓணம் போட்டியில் வென்ற டாப் 5 நடிகைகள் யார்.. யார்.. தெரியுமா?
ஓணம் பண்டிகையின் போது நடிகைகள் போட்ட போஸ்டுக்கு இணையவாசிகள் லைக்ஸ்களை குவித்து தள்ளிவிட்டனர். அப்படி அதிக லைக்ஸ்களை குவித்த டாப் 5 பிரபலங்களின் பட்டியலை பார்க்கலாம்.
கேரளா மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. மகாவிஷ்ணுவின் பிறந்த தினம் மற்றும் வாமனர் அவதரித்த தினத்தை ஓணம் பண்டிகையாக எந்த ஒரு ஜாதி மத வேறுபாடும் இன்றி கேரளா மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தென்னிந்திய சினிமாவில் ஏராளமான நடிகைகள் கேரளாவில் இருந்து வருகை தந்தவர்கள் தான் அதிகம். ந்இந்த ஓணம் பண்டிகையின் போது நடிகைகள் போட்ட போஸ்ட்களால் சோசியல் மீடியா எங்கும் நிரம்பி வழிந்தது. ரசிகர்களும் அவர்களின் போஸ்டுக்கு லைக்ஸ்களை குவித்து தள்ளிவிட்டனர். அப்படி அதிக லைக்ஸ்களை குவித்த ஒரு சில பிரபலங்களின் பட்டியலை பார்க்கலாம்.
இவானா:
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமான இளம் நடிகையாக இருந்து வரும் இவானா ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அவர் திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான 'லவ் டுடே' திரைப்படம். அப்படம் வெளியான பிறகு இளசுகளின் கனவுகன்னியனார். சமீபத்தில் தோனியின் தயரிப்பில் 'எல்ஜிஎம்' படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு இவானா வெளியிட்டிருந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் 5 லட்சம் லைக்ஸ்களுக்கும் மேல் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
நஸ்ரியா :
மிகவும் க்யூட்டான ஒரு நடிகையான நஸ்ரியா ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து இருந்தாலும் எக்கச்சக்கமான ரசிகர்களை பெற்றவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து கொண்டவர் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். ஓணம் பண்டிகைக்கு நஸ்ரியா வெளியிட்ட போஸ்ட் ஏழு லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அனுபமா பரமேஸ்வரன் :
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையான அனுபமா பரமேஸ்வரன் 'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவருடைய ஓணம் ஸ்பெஷல் போஸ்ட் 9 லட்சம் லைக்ஸ்களை குவித்து மூன்றாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.
கல்யாணி பிரியதர்ஷன் :
கல்யாணி நடிப்பில் கவனம் செலுத்துவதற்கு முன்னர் துணை கலை இயக்குநராக அடியெடுத்து வைத்து பின்னர் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஹலோ' திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' திரைப்படத்தில் நடித்திருந்தார். கல்யாணியின் ஓணம் கிளிக்ஸ் பத்து லட்சம் லைக்ஸ்களை குவித்து அவரை இரண்டாவது இடத்தை பிடிக்க செய்துள்ளது.
கீர்த்தி சுரேஷ் :
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் ஒரு வாரிசு நடிகை என்றாலும் தனது சிறப்பான தனித்துமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். ஓணம் பண்டிகைக்கு கீர்த்தி சுரேஷ் போட்ட இன்ஸ்டா போஸ்ட் கிட்டத்தட்ட 14 லட்சம் லைக்ஸ்களை பெற்று முதலிடத்தை பெற்று தந்துள்ளது.