Top 10 Indian Films list : FIPRESCI அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 சிறந்த இந்திய படங்கள்.. லிஸ்ட் இதோ
FIPRESCI சார்பில் இந்திய பிரிவு நடத்திய கருத்துக் கணிப்பில் சிறந்த 10 இந்திய திரைப்படங்கள் முதல் இடத்தை பிடித்துள்ளது, சத்யஜித் ரேயின் 'பதேர் பாஞ்சாலி' திரைப்படம்.
சர்வதேச திரைப்பட விமர்சகர்கள் கூட்டமைப்பின் (FIPRESCI) சார்பில் இந்திய பிரிவு நடத்திய கருத்துக் கணிப்பில் சிறந்த 10 இந்திய திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த லிஸ்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது சத்யஜித் ரேயின் 'பதேர் பாஞ்சாலி' திரைப்படம்.
1929-ஆம் ஆண்டு பிபூதிபூஷன் பந்தோபாத்யாயின் பெங்காலி நாவலை அடிப்படையாக கொண்டு 1955ம் ஆண்டு சத்யஜித் ரே உருவாக்கிய திரைப்படம்"பதேர் பாஞ்சாலி". இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் சத்யஜித் ரே என்பது குறிப்பிடத்தக்கது.
A list of the All Time Ten Best Indian Films, from a poll by FIPRESCI-India (India chapter of the International Federation of Film Critics: FIPRESCI) pic.twitter.com/at4KtvaiGX
— Baradwaj Rangan (@baradwajrangan) October 20, 2022
இந்த பட்டியலில் மீதம் உள்ள படங்கள் பொழுதுபோக்கு சார்ந்த படங்களாக இல்லாமல் சமூகம், கலவரம், அரசியல் உள்ளிட்ட ஜானரில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த சிறந்த படங்களுக்கான பட்டியிலில் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் பட்டியல் இதோ :
2 : 1960 - ரித்விக் கட்டக்கின் இயக்கத்தில் 'மேகே தாகா தாரா'
3 : 1969 - மிருணாள் சென் இயக்கத்தில் 'புவன் ஷோம்'
4 : 1981 - மலையாளத் திரைப்படமான 'எலிப்பதாயம்'
5 : 1977 - கிரீஷ் காசரவல்லி இயக்கத்தில் 'கதஷ்ரத்தா'
6 . 1973 - எம்.எஸ்.சத்யு இயக்கத்தில் 'கர்ம் ஹவா'
7 . 1964 - ரே இயக்கத்தில் 'சாருலதா'
8 . 1974 - ஷ்யாம் பெனகல் இயக்கத்தில் 'அங்கூர்'
9 . 1954 - குரு தத் இயக்கத்தில் 'பியாசா'
10 . 1975 - ரமேஷ் சிப்பி இயக்கத்தில் வெளிவந்த ஹிந்தி பிளாக்பஸ்டர்
திரைப்படம் 'ஷோலே'
With #Sholay being included in the list of All Time Ten Best Indian Films by FIPRESCI-India (India chapter of the International Federation of Film Critics: FIPRESCI), here's a throwback to @sudhirsrinivasn's interview with the legendary #RameshSippyhttps://t.co/tw4ID3PEmt
— Cinema Express (@XpressCinema) October 21, 2022
இவை தான் FIPRESCI என்னும் திரைப்பட விமர்சன அமைப்பின் கருத்துக்கணிப்பில் தேர்ந்தேடுக்கப்பட்ட 10 இந்திய திரைப்படங்களாகும். இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.